5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Drumstick Benefits: முருங்கை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத மருந்து.. இதன் பலன்களை அறிந்தால் அசந்து போவீர்கள்!

Health Tips: மழை காலம் தொடங்கி குளிர் காலம் வரை முருங்கை மரத்தில் இருந்து பல நன்மை தரக்கூடிய பொருட்கள் கிடைக்கும். பொதுவாக முருங்கைக்காயை சீசன் காய்கறி என்று அழைக்கிறோம். இது சாப்பிடுவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு அமுதத்தை அள்ளி தரும். முருங்கை மரத்தில் கிடைக்கும் காய், பட்டை, இலை, பூ என்று பல நன்மைகள் தரக்கூடிய பொருட்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில் முருங்கை 300 க்கு மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை தரலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், முருங்கைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற பல சத்துகள் உள்ளன.

Drumstick Benefits: முருங்கை ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத மருந்து.. இதன் பலன்களை அறிந்தால் அசந்து போவீர்கள்!
முருங்கை (Image: Soumyabrata Roy/NurPhoto via Getty Images and Chris Griffiths/Moment/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 12 Sep 2024 17:17 PM

முருங்கையின் பயன்கள்: நல்ல ஆரோக்கியத்திற்கு நாம் உட்கொள்ளும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இது நமது வாழ்க்கையை சரியான முறையில் அழைத்து செல்லும். இதன் காரணமாகவே உணவில் எப்போதும் பச்சை காய்கறிகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் முருங்கைக்காய். இந்த முருங்கைக்காய் ஆயுர்வேதத்தில் மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. மழை காலம் தொடங்கி குளிர் காலம் வரை முருங்கை மரத்தில் இருந்து பல நன்மை தரக்கூடிய பொருட்கள் கிடைக்கும். பொதுவாக முருங்கைக்காயை சீசன் காய்கறி என்று அழைக்கிறோம். இது சாப்பிடுவது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கு அமுதத்தை அள்ளி தரும். முருங்கை மரத்தில் கிடைக்கும் காய், பட்டை, இலை, பூ என்று பல நன்மைகள் தரக்கூடிய பொருட்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில் முருங்கை 300 க்கு மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை தரலாம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், முருங்கைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற பல சத்துகள் உள்ளன. இன்றைய செய்தியில் முருங்கைக்காய் மற்றும் முருங்கை கீரை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

இரத்த சோகை:

உடலில் ஏற்படும் இரத்த சோகையை குணப்படுத்த முருங்கை கீரை மற்றும் காய் மிகவும் நன்மை பயக்கும். முருங்கை கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. எனவே, உதை உட்கொள்வதன் மூல இரத்த சோகையை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி:

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முருங்கை இலைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதில் அதிக அளவிலான சத்துக்கள் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். முருங்கை உங்கள் உடலில் அனைத்து வகையான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கிறது.

எலும்பு வலிமை:

முருங்கை காய்களில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் இரண்டையும் பலப்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இதை உட்கொள்வதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும்போதே, அவர்களுக்கு போதுமான அளவு கால்சியம் கிடைக்கிறது, இது குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

ஹெபடோப்ரோடெக்டிவ் என்பது உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை உருவாக்கும் ஒரு பொருள். மேலும், முருங்கையில் ஆஸ்டியோபோரோடிக் பண்புகள் உள்ளன. இது உங்கள் உடலை ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

உடல் பருமனை குறைக்க உதவும்:

முருங்கை இலை மற்றும் முருங்கைக்காய் உடல் பருமனை குறைக்கவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும் பயனுள்ள மருந்தாக கருதப்படுகிறது. இதில் பாஸ்பரஸ் உள்ளது, இது உடலின் அதிகப்படியான கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக, முருங்கை கொழுப்புகளை குறைப்பதன் மூலம் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:

முருங்கைக்காயில் புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நுரையீரல் மற்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரக திசுக்களைப் பாதுகாக்க உதவி செய்கிறது. மேலும், முருங்கைக்காய் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது. தினமும் முருங்கைப் பொடியை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முருங்கை விதைகளை சாப்பிடலாம். முருங்கைக்காயில் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேலை செய்கிறது. அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. முருங்கைக் காய்களை உட்கொள்வதால் சர்க்கரை நோய், இதயநோய் போன்றவை குணமாகும்.

ALSO READ: Bone strength Food: எலும்புகளை உறுதியாக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இவைதான்!

வயிறு சம்பந்தமான பிரச்சனை:

வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முருங்கை விதைகளை சாப்பிடலாம். இதனை உட்கொள்வதால் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Latest News