5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Benefits Of Bananas: தினமும் 2 வாழைப்பழம் போதும்.. மூளை முதல் வயிறு வரை அனைத்தையும் பாதுகாக்கும்!

Health Tips: ஒவ்வொரு பருவ காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் உடலுக்கு நன்மை தரும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளது. மேலும், இது கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத பழமாக கருத்தப்படுகிறது. இதன் காரணமாகவே, வாழைப்பழம் ஆற்றலின் சக்தி இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Benefits Of Bananas: தினமும் 2 வாழைப்பழம் போதும்.. மூளை முதல் வயிறு வரை அனைத்தையும் பாதுகாக்கும்!
வாழைப்பழம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 25 Aug 2024 16:05 PM

வாழைப்பழத்தின் பயன்கள்: வாழைப்பழம் பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. வாழைப்பழம் சுவையில் சிறந்தது, ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இந்த ஆற்றல் நிறைந்த வாழப்பழம் சாப்பிடுவதால், பல வகையான நோய்களை உடலில் இருந்து விரட்டலாம். ஒவ்வொரு பருவ காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் உடலுக்கு நன்மை தரும். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளது. மேலும், இது கொழுப்பு இல்லாத, கொலஸ்ட்ரால் இல்லாத பழமாக கருத்தப்படுகிறது. இதன் காரணமாகவே, வாழைப்பழம் ஆற்றலின் சக்தி இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ALSO READ: Health Tips: உடலுக்கு அற்புத பலன் தரும் திராட்சை தண்ணீர்.. ஒரு மாதம் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

எலும்புகளுக்கு வலிமை:

வாழைப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நீங்கள் தினமும் வாழைப்பழம் மற்றும் பால் எடுத்துக்கொண்டால், பலவீனமாக இருக்கும் உங்கள் எலும்புகளை வலுப்படுத்த துணை புரிகிறது.

வயிறு ஆரோக்கியம்:

ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்களை உட்கொள்வது குடல் செயல்பாடு மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வாழைப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி, செரிமான அமைப்பு வழியாக நகர்த்துகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. வாழைப்பழம் தினமும் சாப்பிடுவதன் மூலம் வயிறு உப்புசம் குறைந்து, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாழைப்பழம் நன்மை தரும். இதில் உள்ள நார்ச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்ட பல கலவைகள் உள்ளது. இது சர்க்கரை அளவை பராமரிப்பதன் மூலம், வகை 2 நீரிழிவு நோயை எதிர்த்து போராடுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

நோய்த்தொற்று மற்றும் நோயை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும், வாழைப்பழம் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கவும், நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை சரிசெய்யவும் உதவுகிறது. அதேபோல், வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் துத்தநாக உள்ளடக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும்.

மூளை ஆரோக்கியம்:

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால், செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை தரும். மேலும், சிறந்த தூக்கம் கொடுத்து, சிறந்த அறிவாற்றலை பெற வழிவகுக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த நாளங்களை தளர்த்தும். இது மூளைக்கு ஆக்ஸிஜனை சரியாக வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ALSO READ: Mental Health Tips: பிஸியான வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம்.. எளிதாக போக்க சில வழிகள் இதோ!

உடல் எடை இழப்பு:

வாழைப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உள்ளதால், இது எளிதில் எடையை குறைக்க உதவும். வாழைப்பழத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் இருப்பதால், இது விரைவாக வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது.

Latest News