நீங்கள் குளிக்கும் தண்ணீரில் மிளகுக்கீரை எண்ணெய் கலப்பதன்மூலம், சோர்வு நீங்குவதுடன் உடலும் மனமும் ரிலாக்ஸ்டாக இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இருப்பினும் இதனை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது. மிளகுக்கீரை எண்ணெயில் வலி நிவாரணி பண்புகள் உள்ளதால், இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது.