Banana Kheer: இந்த 5 பொருட்கள் இருந்தால் போதும்.. ஹெல்த்தியான வாழைப்பழ கீர் தயார்..
குழந்தைகளுக்கு நன்றாக பழுத்த வாழைப்பழங்களை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமான வாழைப்பழ கீர் செய்துக் கொடுக்கலாம். இதில் வாழைப்பழம், நட்ஸ், பால் என நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊச்சத்துக்களையும் தரும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதை வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவார்கள்.
குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை நேரடியாக சாப்பிட குடுத்தால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, நன்றாக பழுத்த வாழைப்பழங்களை வைத்து வீட்டிலேயே ஆரோக்கியமான வாழைப்பழ கீர் செய்துக் கொடுக்கலாம். இதில் வாழைப்பழம், நட்ஸ், பால் என நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊச்சத்துக்களையும் தரும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதை வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவார்கள். இந்த கீர்-ஐ பெரியவர்களும் பருகலாம். ஆரோக்கியமான ரெசிபியை எளிமையாக எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.
Also Read: Corn Fritters: சோளம் இருந்தா ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் சோள வடை செய்து பாருங்க…
தேவையான பொருட்கள்:
- பால் – 2 கப்
- வாழைப்பழம் – 5
- ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
- நாட்டுச் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் – 5 ஸ்பூன்
- நறுக்கிய நட்ஸ் – 3 ஸ்பூன்
வாழைப்பழ கீர் செய்வது எப்படி?
முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சிக் கொள்ளவும். பிறகு, அந்த பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பால் அடிப்பிடிக்காமல் இருக்க ஒரு கரண்டியை பயன்படுத்தி அடிக்கடி கிளறிவிடவும். பால் நன்றாக கொதித்து கெட்டியானதும் அத்துடன் ஏலக்காய் தூள், வெல்லம் மற்றும் நறுக்கிய நட்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். பிறகு, அதை முழுவதுமாக ஆறவிடவும். இதற்கிடையில், வாழைப்பழத்தை பிசைந்துக் கொள்வோம்.
நன்றாக பழுத்த வாழைப்பழங்களை தோலை நீக்கிவிட்டு, அதை கைகளால் நன்றாக பிசைந்துக் கொள்ளுங்கள். இப்போது பால் நன்றாக ஆறியிருக்கும் அத்துடன் இந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளுங்கள்.
கலந்தபிறகு, அதை ஃப்ரீஜரில் 1 மணி நேரம் வைத்து ஜில்லென்றும் பருகலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைக்காமல் சூடாகவும் பருகலாம். சுவையான குளு குளு வாழைப்பழ கீர் தயார்.
Also Read: Weight Gain Foods: ஒல்லியாவே இருக்கிற நீங்க சீக்கிரம் எடை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க..