Badam Pisin Payasam: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி..! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..
பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெயர் பெற்றது. இந்த பாதாம் பிசினை வெறுமனே சாப்பிட சொன்னால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி கொஞ்சம் யோசிப்பார்கள். காரணம் பாதாம் பிசினுக்கு வாசனை மற்றும் சுவை கிடையாது. அதுவே, பாதாம் பிசினை உலர்ந்த பழங்களுடன் சேர்த்து பாயசம் மாதிரி செய்துக் கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி குடிப்பார்கள். ஏனென்றால், பாயசத்தின் தித்திப்பான சுவையும் கண்ணைப் பறிக்கும் நிறமும் அவர்களை சாப்பிட சொல்ல தூண்டும். சரி, வாங்க வெறும் 10 நிமிடத்தில் பாதாம் பிசின் பாயசம் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.
பாயசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அந்த பாயசமே ஆரோக்கியம் தருவதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ரெசிபியை தான் செய்ய போகிறோம். இந்த ரெசிபியில் உடலுக்கு நன்மை பயக்கும் அத்தனை பொருட்களும் இடம்பெற்றிருக்கின்றன. பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெயர் பெற்றது. இந்த பாதாம் பிசினை வெறுமனே சாப்பிட சொன்னால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி கொஞ்சம் யோசிப்பார்கள். காரணம் பாதாம் பிசினுக்கு வாசனை மற்றும் சுவை கிடையாது. அதுவே, பாதாம் பிசினை உலர்ந்த பழங்களுடன் சேர்த்து பாயசம் மாதிரி செய்துக் கொடுத்தால் இன்னும் வேண்டுமென்று கேட்டு வாங்கி குடிப்பார்கள். ஏனென்றால், பாயசத்தின் தித்திப்பான சுவையும் கண்ணைப் பறிக்கும் பாயசத்தின் நிறமும் அவர்களை சாப்பிட சொல்ல தூண்டும். சரி, வாங்க வெறும் 10 நிமிடத்தில் பாதாம் பிசின் பாயசம் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- பாதாம் பிசின் – 5 துண்டு
- முந்திரி – 1 கைப்பிடி அளவு
- பாதாம் – 1 கைப்பிடி அளவு
- பிஸ்தா – 1 கைப்பிடி அளவு
- துருவிய தேங்காய் – 1 கப்
- மாதுளம் பழம் முத்துக்கள் – 2 ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை – 1 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய நட்ஸ் – 2 ஸ்பூன்
- சப்ஜா விதை – 1 ஸ்பூன்
- வாழைப்பழம் – 1
குறிப்பு:
பாயசம் செய்யும் முதல் நாள் இரவே பாதாம் பிசினை தண்ணீரில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு மற்றும் பாதாம் பருப்பு மூன்றை தனியாக மற்றொரு கப்பில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பாயசம் செய்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சப்ஜா விதையை 1 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
Also Read: Vaiyamkatta Perumal: பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் “வையம் காத்த பெருமாள் கோயில்”!
பாதாம் பிசின் பாயசம் செய்முறை:
பாயசம் செய்ய, முதலில் ஊற வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்பு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
பிறகு, மற்றொரு மிக்ஸியில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். பால் ரொம்ப தண்ணியாக இருக்க கூடாது. ஓரளவு கெட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது, அரைத்த நட்ஸ் பேட்டில் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்துவிட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் ஊற வைத்த சப்ஜா விதை, பாதாம் பிசின் மற்றும் மாதுளம் பழம் முத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
கடைசியாக, நாட்டுச்சர்க்கரை மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸை சேர்த்து கலக்கினால், சுவையான தித்திக்கும் பாதாம் பிசின் பாயசம் தயார். இதை ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து ஜில்லென்று பருகலாம். சுவையோ ஆஹா… யம்மி..!!