Aloe Vera Skin Care: சருமத்திற்கு சஞ்சீவியாக செயல்படும் கற்றாழை.. முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Aloe Vera Benefits: கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, போலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3, பி6, வைட்டமின் பி12, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், கற்றாலை ஜெல்லின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை பல மருத்துவ பண்புகளை கொண்ட தாவரமாகும். இது பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நமக்கு நன்மை தருகிறது. இதன் சாற்றை குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, போலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3, பி6, வைட்டமின் பி12, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், கற்றாலை ஜெல்லின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Breast Cancer: மார்பக புற்றுநோய் பற்றிய பயமா..? வீட்டிலேயே இப்படி பரிசோதனை செய்து பாருங்க!
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்:
கற்றாழை ஜெல் முகத்தில் தெரியும் நுண்ணிய கோடுகளின் பிரச்சனையை நீக்க எளிதான தீர்வாகும். இதனை கைகள் மற்றும் முகத்தில் தடவுவதால் சருமத்தில் உள்ள கொலாஜன் அளவு அதிகரித்து, சருமத்தின் பளபளப்பாக்க உதவி செய்கிறது. இதை தினமும் முகத்தில் தடவுவதன்மூலம், தோல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.
சூரிய ஒளியில் பாதுகாக்கும்:
கற்றாழை அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் ஏற்படும் சொறி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதனை, முகத்தில் தடவினால் சூரியக் கதிர்கள் சருமத்தை பாதிக்காது. வெளியில் அதிகம் வேலை செய்பவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவினால் நல்ல பலன் தரும்.
நீரேற்றம்:
சரும வறட்சியை குறைக்க கற்றாழை ஒரு சிறந்த வழி. இதிலுள்ள குளிர்ச்சியானது முகத்தை ஆழமாகவும் சுத்தமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதனை தினமும் முகத்தில் தடவி வந்தால் முகத்தின் பொலிவு தங்கும். இது தவிர, இது இறந்த சரும செல்களை அகற்றி முக சரும அமைப்பை ஆரோக்கியமாக்குகிறது.
முகப்பருவில் இருந்து நிவாரணம்:
கற்றாழை ஜெல்லை இரவு முழுவதும் முகத்தில் தடவி வந்தால், சருமத்துளைகளில் படிந்திருக்கும் தூசிகள் நீங்கி முகத்தில் உள்ள பருக்களை தவிர்க்கலாம். முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பருக்களுக்கு காரணமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், தோலின் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெயை அகற்ற கற்றாழை ஜெல்லை பயன்படுத்துங்கள்.
ஆன்டிஆக்ஸிடன்ட்:
கற்றாழை ஜெல்லில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது முகப்பரு மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளை சரிசெய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.
காயம் ஆற்றும்:
கற்றாழை ஜெல் காயங்களை விரைவில் ஆற்றும். கற்றாழை ஜெல் முகத்தில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கற்றாழை ஜெல் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இது தவிர, முகத்தில் சிறிய சிவப்பு பருக்கள் தோன்றினால், கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்த வேண்டும்.
தழும்புகள்:
இரவில் கற்றாழை கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமம் மேம்படும். மேலும் சருமம் இறுக்கமாக மாறும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தை பளபளக்க உதவுகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், பருக்கள் மற்றும் தழும்புகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
ALSO READ: Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!
கற்றாழை ஜெல் நைட் க்ரீம் செய்வது எப்படி..?
- இதற்கு கற்றாழை ஜெல்லுடன் லாவெண்டர் எண்ணெய்யும் தேவை.
- ஒரு பாத்திரத்தில் கற்றாழை ஜெல் மற்றும் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது இந்த கலவையை இரவில் தூங்கும் முன் உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும், பின்னர் காலையில் எழுந்ததும், உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவவும்.
- யாராவது கற்றாழை ஜெல்லை இரவில் தடவ விரும்பவில்லை என்றால், இந்தக் கலவையைப் பயன்படுத்திய 20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு அவர் தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல் மற்றும் காபி:
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த கற்றாழை ஜெல் நமது சருமத்தின் மந்தமான தன்மையை நீக்குகிறது. சருமத்தை சுத்தமாகவும், தெளிவாகவும் மாற்ற, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் சம அளவு காபியை கலக்கவும். இந்த பேஸ்ட்டை தயாரித்த பிறகு, முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவவும். இது சருமத்தின் ஆழமான சுத்திகரிப்புக்கு காரணமாகிறது மற்றும் முகத்தில் பளபளப்பை அதிகரிக்கிறது.