Teacher’s Day 2024: ஆசிரியர் தினம் 2024.. உங்க ஆசிரியருக்கு இப்படி பரிசு கொடுத்து அசத்துங்க!
ஆசிரியர் தினம் 2024: இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1962ஆம் ஆண்டு மதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, ஆசிரியர் தினத்தில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை, பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்விங்கள்.
ஆசிரியர் தினம் 2024: இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வெறும் கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியரின் பணி அல்ல. அவற்றை தாண்டி வாழ்க்கை நடைமுறைகள் கற்றுக் கொடுத்து தருகிறார்கள். வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு உள்ளிட்டவற்றை சிறிது வயது முதலே கற்றுக் கொடுக்கிறார்கள். இப்பணியை செய்வதற்கு தன்னலமற்ற கொண்டவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்கள் முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் தான் இந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்திருக்கிறார். மேலும், இவர் மாபெரும் தத்துவ மேதையாகவும் விளங்குகிறார்.
இவரை கவுரப்படுத்தும் வகையில், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, ஆசிரியர் தினத்தில் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பரிசுகளையும் வழங்கி அவர்களை மகிழ்விங்கள். உங்கள் ஆசிரியருக்கு என்ன பரிசுகளை கொடுக்கலாம் என்று பார்ப்போம்.
Also Read: ஒரு லட்சம் பணியிடங்கள்… பிளிப்கார்ட் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
என்ன பரிசு கொடுக்கலாம்?
உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுக்கலாம். அதில் ‘ஆசிரியர் தினம்’ வாழ்த்துகள் என்று குறிப்பிடலாம். உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதி கொடுக்கலாம். உங்கள் ஆசிரியருக்கு பிடித்த பாடலை வகுப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாடி வாழ்த்தலாம். ஆசிரியருக்கு பிடித்த பரிசுகளை வாங்கிக் கொடுக்கலாம். இல்லையென்றால் நீங்களே ஸ்பெஷலாக ஒரு பரிசுகளை செய்து கொடுக்கலாம்.
கிரீட்டிங் கார்டை நீங்களே செய்து ஆசிரியர் தினத்துக்கு பரிசாகக் கொடுக்கலாம். உங்கள் ஆசிரியருக்கு நன்றி கொல்லும் விதமாக வாசகங்கள் கொண்ட வாழ்த்து மடலை புகைப்படமாக உங்கள் ஆசிரியருக்கு பரிசாக வழங்கலாம். புத்தங்கள், பேனாக்கள் ஆகியவற்றையும் உங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பரிசாக வழங்கலாம்.
Also Read: பொய் செய்திகள்.. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு
வாழ்த்து செய்திகள்:
- நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல. என் உத்வேகத்தின் வழிகாட்டியும் நீங்களே! உங்களை நாங்கள் பெற்றிருப்பது எங்கள் அதிர்ஷ்டம். இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்
- மாணவனாக வந்த என்னை நண்பனாக வழிநடத்தி, சிறந்த கல்வியாளராக விளங்கியமைக்கும் நன்றி ஐயோ.. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
- என் வாழ்வில் மிக முக்கியமானவற்றை உணர்ந்து கொள்ள நீங்கள் உதவியாக இருந்தீர்கள்.. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
- புத்தகங்களை விட பொது அறிவை கற்றுக் கொடுத்தவர் நீங்களே.. ஒன்றும் தெரியாத பருவத்தில் என் கைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுத்தீர்கள்.. என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என் அதிர்ஷ்டம்.. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்