5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Telangana: மாவட்ட ஆட்சியர், தாசில்தாருக்கு சரமாரி அடி.. தெலங்கானா மக்கள் ஆவேசம்!

Viral Video: புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க மாநில அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஹாரபாத் மாவட்டத்தில் உள்ள லகாசர்லா கிராமத்தில் இடம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்டமிடல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் மருந்து நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் கிராம மக்களிடமிருந்து கையகப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telangana: மாவட்ட ஆட்சியர், தாசில்தாருக்கு சரமாரி அடி.. தெலங்கானா மக்கள் ஆவேசம்!
மாவட்ட ஆட்சியரை தாக்கிய மக்கள்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 Nov 2024 11:18 AM

தெலங்கானா: தெலங்கானாவில் போராடி வந்த கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் சொந்த தொகுதியில் இப்படி நடந்துள்ளது அம்மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள விஹாரபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள லகாசர்லா கிராமத்தில் தான் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் காங்கிரஸ் ஆளும் மாநில அரசாக இருந்து வருகிறது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி வகித்து வருகிறார்.

Also Read: Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

தெலங்கானா மாநில மக்களின் வளர்ச்சிக்காக அவரது தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க மாநில அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஹாரபாத் மாவட்டத்தில் உள்ள லகாசர்லா கிராமத்தில் இடம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்டமிடல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் மருந்து நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் கிராம மக்களிடமிருந்து கையகப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக நிலங்களை மருந்து நிறுவனங்களுக்கு வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துவதன் தொடர்பாக லகாசர்லா கிராம மக்களுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருந்தது. அதன்படி இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்டு சென்றனர். விஹாராபாத் மாவட்ட ஆட்சியராக இருக்கும்  பிரதீக் ஜெயினும் அவர்களுடன் லகாசர்லா கிராமத்திற்கு சென்றார். பேச்சுவார்த்தை நடைபெறும் பந்தலுக்கு சென்று மருந்து நிறுவனங்களுக்காக நீங்கள் நிலத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதற்கு கிராம மக்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Also Read: Ram Mandir: வந்தாச்சு குளிர்காலம்.. அயோத்தி ராமருக்கு தயாராகும் கம்பளி உடைகள்!

மேலும் மருந்து நிறுவனம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விவசாய நிலம் இருப்பதால் அப்பகுதி விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கருத்து மோதல் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டது. பிரச்சினையை சுமுகமாக முடிக்கும் வகையில் அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தொடர்ச்சியாக கிராம மக்கள் நிலம் கொடுக்க மறுத்து கோபத்தில் கொந்தளித்தனர்.

ஒரு கட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் உடனடியாக லகாசர்லா கிராமத்தை விட்டு திரும்பிச் செல்லுமாறு கோஷமிட்டு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து திடீரென்று கோபத்தின் உச்சிக்கே சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீக் ஜெயின், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மீது தங்களது தாக்குதலை தொடங்கினர்.

இதில் கலெக்டர் பிரதீக் ஜெயின் மற்றும் அதிகாரிகள் சிலர் ஓடிச்சென்று காரில் ஏறி தாக்குதலில் இருந்து உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் சில அதிகாரிகளுக்கு இலேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசுத்துறை அதிகாரிகள் அங்கிருந்து செல்ல முற்பட்டனர்.  ஆனால் கோபம் தீராமல் கிராம மக்கள் அவர்களின் கார் மீது கல் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதல்வரின் சொந்த சொகுதியில் கூட அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லையா என இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Latest News