5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Social media : சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு ரு.8 லட்சம் வரை சம்பளம்.. லேட்டஸ்ட் அறிவிப்பு வெளியிட்ட உத்தர பிரதேச அரசு

பிரதமர் மோடிக்கு பிறகு பாஜக தலைவர்களில் செல்வாக்கு மிக்கவராக யோகி ஆதித்யநாத் திகழ்ந்து வரும் நிலையில், அவரது தலைமையிலான அரசு உத்தரப்பிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாநில அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களின் நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு பரப்புவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social media : சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு ரு.8 லட்சம் வரை சம்பளம்.. லேட்டஸ்ட் அறிவிப்பு வெளியிட்ட உத்தர பிரதேச அரசு
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 28 Aug 2024 19:12 PM

உத்தரப்பிரதேசம்: மாநில அரசு அறிமுகம் செய்யப்படும் திட்டங்களின் பயன்களைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க உத்தரப்பிரதேச அரசு வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலாளரான சஞ்சய் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப்பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் மீடியா பாலிசி 2024 நாம் மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு கணிசமான வேலை வாய்ப்புகளை வழங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. அவரது ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் சர்ச்சைக்குள்ளானதாகவும்,பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Also Read: TV Screen Cleaning: எல்இடி ஸ்மார்ட் டிவியை இப்படி சுத்தம் பண்ணுங்க.. இல்லனா நஷ்டம் உங்களுக்குதான்!

பிரதமர் மோடிக்கு பிறகு பாஜக தலைவர்களில் செல்வாக்கு மிக்கவராக யோகி ஆதித்யநாத் திகழ்ந்து வரும் நிலையில், அவரது தலைமையிலான அரசு உத்தரப்பிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாநில அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களின் நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு பரப்புவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் பிரபலமாக உள்ளவர்களைப் பின்பற்றுவர்கள் அல்லது சமூக வலைத்தள சேனலின் சந்தாதாரர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் நான்கு வகையாக இது பிரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பின்தொடர் பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ. 4 லட்சம், ரூ.5லட்சம் என நான்கு வகையாக பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் யூட்யூப் சேனலில் விளம்பர வீடியோக்கள், குறும்படங்கள், மற்றும் பாட்காஸ்ட் வீடியோக்களை உருவாக்குவதன் மூலம் நான்கு பிரிவுகளில் ரூ. 4 லட்சம், ரூ.6 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு விதமான கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: Actress Khushbu: ”பாலியல் தொல்லை விஷயத்தில் சமரசம் செய்யாதீர்கள்” – பெண்களுக்கு குஷ்பு அட்வைஸ்!

இந்தக் கொள்கையை பயன்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் மாநில அரசில் முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு திட்டங்கள் பற்றிய விளம்பரங்கள் வழங்கப்படும். இதன் மூலம் ஏஜென்ஸிகள் அல்லது பிரபலமாக உள்ளவர்கள் வீடியோக்கள், பதிவுகள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்க வேண்டும். அதேசமயம் எந்தவொரு வீடியோவும், பதிவும் அநாகரிகமாகவும், ஆபாசமாகவும், தேச விரோதமாகவோ இருக்கக்கூடாது என உத்தரப்பிரதேச அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம் ஆட்சேபனைக்குரிய கருத்தை வெளியிடும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest News