Crime: உத்தர பிரதேசத்தை மிரட்டும் சீரியல் கில்லர்.. 14 மாதங்களில் 9 பெண்கள் கொலை.. பகீர் சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் கடந்த 14 மாதத்தில் ஒன்பது கொலைகள் நடந்த சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஒன்பது பேரும் பெண்கள் என்றும், அவர்கள் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த சேலையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர் என்ற பகீர் தகவலையும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தை மிரட்டும் சீரியல் கில்லர்: உத்தர பிரதேசத்தில் கடந்த 14 மாதத்தில் ஒன்பது கொலைகள் நடந்த சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட ஒன்பது பேரும் பெண்கள் என்றும், அவர்கள் ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், பெண்கள் அனைவரும் தங்கள் சொந்த சேலையால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர் என்ற பகீர் தகவலையும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி மூச்சுத்திணற வைத்து பெண்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போலீசாரின் கூற்றுப்படி, ஷாஹி, ஷீஷ்கா என இரண்டு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 25 கிலோமீட்டர் சுற்றளவில் இந்தக் கொலைகள் நடந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்கள் 45 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். இந்த இரண்டு பகுதிகளும் அருகருகே அமைந்துள்ளன. கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் கொலையான பெண்களின் சடலங்கள் காணப்பட்டன. ஆனால், பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
Also Read: கணவர் பெயரை எப்படி சொல்லலாம்? ராஜ்யசபாவில் கடுப்பான அமிதாப் பச்சன் மனைவி!
14 மாதத்தில் 9 பெண்கள் கொலை:
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று கொலைகள் அடுத்தடுத்து நடத்துள்ளன. இதைத் தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் தலா ஒன்றும், நவம்பரில் இரண்டு கொலைகள் அரங்கேறியுள்ளனர். ஜூன் 5, 2023 அன்று கலாவதி, ஜூன் 19 தன்வதி, ஜூன் 30 பிரேம்வதி, ஜூலை 22 குஸ்மா, ஆகஸ்ட் 23 விராவதி, அக்டோபர் 31 மஹ்மூதன், நவம்பர் 20 ஊர்மிளா, நவம்பர் 26 துலாரோ தேவி, ஜூலை 3ஆம் தேதி அனிதா தேவி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலங்கள் குல்ச்சா, ஆனந்த்பூர், கஜூரியா, சேவா ஜ்வாலாபூர், லக்கிம்பூர், கர்சைனி, ஜகதீஷ்பூர் மற்றும் ஹவுஸ்பூர் கிராமங்களில் கண்டெடுக்கப்பட்டன. இந்த தொடர் கொலைக்களுக்கு பின்னர் கொலையாளியை பிடிக்க 300 காவலர்களைப் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் 14 குழுக்களாக பிரிக்கப்பட்டு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
Also Read: அடுத்த அதிர்ச்சி… வயநாட்டில் நில அதிர்வு.. அச்சத்தில் கேரள மக்கள்!
இந்த நிலையில், பரேலி மாவட்டத்தில் ஒன்பது கொலைகளை செய்த குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் குல்தீப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பரேலியில் உள்ள நவாப்கஞ்ச் காவல் நிலைய எல்லையில் வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் விளக்கத்தின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களின் ஒவ்வொரு ஓவியத்தையும் போலீசார் வெளியிட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த காரணத்திற்காக கொலைகளை செய்தாரா? பின்னணி என்ன? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.