அதிகமாக மது அருந்தும் மாநிலங்களின் பட்டியல்.. தமிழ்நாட்டிற்கு எந்த இடம் தெரியுமா?
மதுபானம் குடிப்பதால் பல தீமைகள் விளைகின்றன. இருப்பினும், மக்களிடையே மதுபானம் குடிக்கும் பழக்கம் குறைந்தபாடில்லை. மதுபானம் குடிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எந்த மாநிலத்தில் அதிகமாக மதுபானத்திறக்காக செலவு செய்கிறார்கள் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதிகமாக மது அருந்தும் மாநிலங்கள்: மதுபானம் குடிப்பதால் பல தீமைகள் விளைகின்றன. இருப்பினும், மக்களிடையே மதுபானம் குடிக்கும் பழக்கம் குறைந்தபாடில்லை. மதுபானம் குடிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எந்த மாநிலத்தில் அதிகமாக மதுபானத்திறக்காக செலவு செய்கிறார்கள் என்பதற்கான விவரங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் தனி நபர் ஒருவர் ஆண்டிற்கு மதுபானத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தெலங்கானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதாவது தெலங்கானாவில் தனிநபர் ஆண்டிற்கு மதுபானத்திற்காக 1,623 ரூபாய் செலவு செய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் தெலங்கானவில் ரூ.1,694 செலவு செய்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 1,623 ரூபாய் செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. 11 பேர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி காரணம்!
அதேபோல, ஆண்டிற்கு குறைவாக மதுபானத்திற்கு செலவு செய்யும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இங்கு ஆண்டிற்கு தனிநபர் ரூ.75 வரை செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவிற்கு அடுத்தபடியாக, ஆந்திராவில் 2022-23ஆம் ஆண்டில் தனிநபர் ஆண்டிற்கு மதுபானத்திற்காக 1,306 ரூபாய் செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் 1,406 ரூபாய் ஆண்டிற்கு செலவு செய்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு எந்த இடம்?
மூன்றாவது இடத்தில் பஞ்சாப் மாநிலம் உள்ளது. பஞ்சாபில் ஆண்டிற்கு தனிநபர் ஒருவர் மதுபானத்திற்காக 1,245 ரூபாய் செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் வெறும் 906 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டில் மதுபானத்திற்கு செலவு செய்வது அதிகரித்திருக்கிறது. இதற்கு அடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,227 ரூபாயும், ஒடிசாவில் 1,156 ரூபாயும் ஆண்டிற்கு மதுபானத்திற்காக தனிநபர் செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் தனிநபர் ஆண்டிற்கு மதுபானத்திற்காக 841 ரூபாய் செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 895 ரூபாய் செலவு செய்த நிலையில், 2023ஆம் ஆண்டு 841 ரூபாய் செலவு செய்வதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு மட்டும் தனிநபர் ஆண்டிற்கு மதுபானத்திற்காக 1,536 ரூபாய் செலவு செய்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: அடுத்த ஒரு வாரத்திற்கு பிச்சு உதறபோகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் எச்சரிக்கை!
இதனுடன் பார்கையில் தமிழகத்தில் மதுபானம் அருந்துபவர்களின் பழக்கம் குறைந்து வருவதாக தெரிகிறது. இந்தியாவில் இப்போது ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் உள்ளது. மது மற்றும் பெட்ரோலிய பொருட்களை தவிர அனைத்தும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு பிறகு மாநில அரசால் நேரடியாக வரிகளை விதிக்க முடியாது. மது, பெட்ரோல், டீசல், சொத்து வரி உள்ளிட்ட சில விஷயங்களில் மட்டும் மாநில அரசால் வரி விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.