Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஜாமீன்.. குஷியான தொண்டர்கள்!
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபான கொள்கை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆஜராக சொல்லி 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பிய […]
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபான கொள்கை திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆஜராக சொல்லி 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்து வந்தார். இப்படியான நிலையில் கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அன்று இரவு 9:30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
Also Read: சூர்யா படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை
மக்களவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி கடந்த ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இப்படியான நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றத்தை அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் நாடினார்.
தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றிலும் அவர் மனு தாக்கல் செய்தார். இதில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் சிபிஐ பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இதற்கு இடையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்ற கதவை தட்டினார். இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Also Read: Ganesh Chaturthi: தொடரும் விநாயகர் சதுர்த்தி சோகம்.. பெட்ரோல் ஊற்றி ஒருவர் எரித்துக்கொலை!
இந்த மனு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இடைக்கால ஜாமீன் வழக்கு மீண்டும் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வழக்குகள் பட்டியல் தொடர்பாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை நீதிமன்றம் தொடங்கியவுடன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜன் புயான் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததது. தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் ரூ.10 லட்சம் பிணைத்தொகையும், பொதுத்தளத்தில் இதனைப் பற்றி பேசக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.