5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jaya Bacchan: கணவர் பெயரை எப்படி சொல்லலாம்? ராஜ்யசபாவில் கடுப்பான அமிதாப் பச்சன் மனைவி!

மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பியான ஜெயா பச்சனுக்கு இடையில் இன்று வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயா பச்சன் கூறியுள்ளார்.

Jaya Bacchan: கணவர் பெயரை எப்படி சொல்லலாம்? ராஜ்யசபாவில் கடுப்பான அமிதாப் பச்சன் மனைவி!
ஜெயா பச்சன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Aug 2024 18:22 PM

மாநிலங்களவையில் சலசலப்பு: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டாலின் அமிதாப் பட்சன் மனைவி ஜெயா பட்சன் சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். இன்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் ஜெயா பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஜெயா பச்சன் கடும் கோபம் அடைந்தார். இதுகுறித்து பேசிய ஜெயா பச்சன், “நீங்கள் பெண்களை புரிந்து கொள்ளவில்லை. பெண்களுக்கு தனக்கென்று எந்த அடையாளமும் இல்லை என்று நினைக்கிறீர்கள். ஜெயா அமிதாப் பச்சன் என்ற கூறியதன் தொனி எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்கள் தொனியை ஏற்க முடியாது. நான் கலைஞர். ஒவ்வொருவரின் உடல் அசைவை என்னால் புரிந்து கொள்ள முடியும்.


எனவே உங்களின் பேச்சு ஏற்புடையதாக இல்லை” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய ஜெகதீப் தன்கர், “ஜெயா ஜி நீங்கள் இருக்கையில் அமருங்கள். நான் இங்கிருந்து பார்ப்பதை நீங்கள் பார்க்கவில்லை. நீங்கள் ஒரு பிரபலமாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

”இது பெண்களுக்கு அவமரியாதை”

இதனை அடுத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ”இது ஒரு அவமானகரமான அனுபவம். மாநிலங்களவை தலைவர் நாற்காலியில் இருந்து என்ன சொன்னாலும் அனுமதிக்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் தலைவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாங்கள் பள்ளிக் குழந்தைகள் இல்லை, எங்களில் சிலர் மூத்த குடிமக்களும் கூட. இதனால் தான் நான் வருதப்பட்டேன். குறிப்பாக, காங்கிரஸ் ததலைவர் கார்கே பேச எழுந்தபோது அவர் மைக்கை அணைத்துவிட்டார்.

Also Read: வயநாடு நிலச்சரிவுக்கு உதவிய சென்னை சிறுமி.. 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டல்!

ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொல்லை கொடுப்பது போன்ற வார்த்தைகள். நீங்கள் பிரபலங்களாக இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் பேசுவதுபோல் யாரும் பேசவில்லை. இது பெண்களுக்கு அவமரியாதை. ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Latest News