Rajya Sabha Election: மாநிலங்களவை தேர்தல்… காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேதி அறிவிப்பு!
மாநிலங்களவை தேர்தல்: மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 எம்.பி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆகும்.
மாநிலங்களவை தேர்தல்: மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 எம்.பி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர் இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், 12 பேர் நியமன பதவி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 233 பேரில் ஒரு பங்கு பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 20 இடங்கள் தற்போது காலியாக உள்ளன. அதில், அசாம், ஒடிசா, பீகார், ஹரியான, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநில எம்.பிக்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்குவர்.
Also Read: வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம்.. கலைந்த தங்கப் பதக்க கனவு.. உடைந்த இந்திய ரசிகர்கள்!
இதற்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 3ஆம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம், பீகார், மகாராஷ்டிராவில் தலா இரண்டு இடங்கள், ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசாவில் தலா ஒரு இடங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
Election Commission of India releases notification for the 12 vacant seats of Rajya Sabha. Elections will be held on 3rd September. The last date for withdrawal of nominations is the 26th and 27th of August. pic.twitter.com/1d3SgWivOT
— ANI (@ANI) August 7, 2024
இந்த மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நாள் ஆகஸ்ட் 22ஆம் தேதியும், மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 26,27ஆம் தேதிகள் ஆகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா:
மொத்தம் 10 மாநிலங்களவை எம்.பிக்கள் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். அதன்படி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் மாநிலங்களவை எம்.பிகளாக இருந்தனர். இவர்கள் 3 பேரும் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர்.
இதேபோல, மிசா பாரதி, கே.சி.வேணுகோபால், பிப்லாப் குமார் தேவ், உதயன்ராஜே போன்ஸ்லே, தீபந்தர் சிங் ஹூடா. விவேக் தாகூர், கமக்யா பிரசாத் தாசா ஆகியோரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் தெலங்கானா மாநிலங்களவை எம்.பியாக இருந்த கேசவராவ், ஒடிசா மாநிலங்களவை எம்.பியாக இருந்த மம்தா மோஹந்தா ஆகியோர் ஜூலை மாதம் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர்.