5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Delhi Ganesh: தமிழ் சினிமாவின் ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி தமிழில் இரங்கல்!

Delhi Ganesh: டெல்லி கணேஷ் கடந்த 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தார். அவருக்கு 80 வயது ஆகிறது. கடந்த 1976ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்தரின் பட்டினப் பிரதேசம் படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் திரையுலக பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400க்கு மேற்பட்ட படங்களில் பண்யாற்றியுள்ளார். கமலஹாசனின் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

Actor Delhi Ganesh: தமிழ் சினிமாவின் ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி தமிழில் இரங்கல்!
டெல்லி கணேஷ் – பிரதமர் மோடி
mukesh-kannan
Mukesh Kannan | Published: 10 Nov 2024 20:51 PM

தென்னிந்திய சினிமாவில் 400 படங்களுக்கு மேல் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற பெயரை பெற்ற பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவர் நீண்ட நாட்களாக வயது அதிகரிப்பாலும், உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்றிரவு டெல்லி கணேஷ் தனது 80வது வயதில் காலமானார். இதையடுத்து, தமிழ் திரையுலகம் இவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: Actor Delhi Ganesh: மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உயிரிழப்பிற்கு பிரபலங்கள் இரங்கல்

டெல்லி கணேஷ் வாழ்க்கை:

டெல்லி கணேஷ் கடந்த 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி பிறந்தார். அவருக்கு 80 வயது ஆகிறது. கடந்த 1976ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்தரின் பட்டினப் பிரதேசம் படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவர் திரையுலக பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 400க்கு மேற்பட்ட படங்களில் பண்யாற்றியுள்ளார். கமலஹாசனின் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

சமீபகாலங்களில் டெல்லி கணேஷ் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஷார்ட் ஃபிலிம் உள்ளிட்டவைகளிலும் பணியாற்றியுள்ளார். டெல்லி கணேஷின் உண்மையான பெயர் கணேசன். இவரது தொழில் ரீதியாக டெல்லி கணேஷ் என்று அழைக்கப்பட்டார். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு, இவர் டெல்லியில் உள்ள நாடக குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். இதனால், இப்பெயரை பெற்றார். மேலும், டெல்லி கணேஷ் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு, 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையிலும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழில் இரங்கல்:

தமிழ் திரைப்பட நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது இரங்கல் பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும் தலைமுறை கடந்து ரசிகர்களைக் கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்படுவார். நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.” என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: Actor Delhi Ganesh: விமானப்படை வேலை வேண்டாம்… நடிப்புதான் வேணும் – டெல்லி கணேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் இரங்கல் பதிவு:

தமிழ்திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவு, “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஆர் மாதவன் பதிவு:

நடிகர் ஆர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தனித்துவமான நடிகர் இப்போது சொர்க்கத்திற்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை மகிழ்விப்பார். உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சார். கடவுள் உங்கள் ஆன்மாவுக்கு சாந்தியை கொடுக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளங்களில், “ டெல்லி கணேஷ் சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ் சினிமாவின் பல்துறை நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு எனது அஞ்சலியும், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

Latest News