5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..

பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பதிவில், “ மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ராஜ்பவனுக்குச் செல்வதற்கு முன் பாஜக அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மதிய உணவும் சாப்பிட்டார்.

PM Modi: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..
நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Nov 2024 11:37 AM

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஒடிசாவில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைமையகத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றடைந்தார், அங்கு மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார். கட்சி அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் தங்கிய மோடி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேசினார். புவனேஸ்வரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார்.

கட்சியை வலுப்படுத்தும் பணிகள்:


இது தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பதிவில், “ மாநிலம் முழுவதும் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தோம்” என குறிப்பிட்டுள்ளார். ராஜ்பவனுக்குச் செல்வதற்கு முன் பாஜக அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மதிய உணவும் சாப்பிட்டார். பாஜகவின் ஒடிசா பிரிவுத் தலைவர் மன்மோகன் சமல் கூறுகையில், ” மாநில அரசு அல்லது வேறு எந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படவில்லை. குடும்ப உறுப்பினர்கள் போல் பேசினோம். கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பேச்சை பிரதமர் மோடி பொறுமையாக கேட்டறிந்தார்” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன – பிரதமர் மோடி:

எதிர்க்கட்சிகளை தாக்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் இரவு பகலாக பாஜகவுக்கு எதிராக பொய்களைப் பரப்புவதில் மும்முரமாக இருப்பதாகவும், ஆனால் ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் உண்மையைப் புரிந்துகொண்டு பாஜகவை ஆசீர்வதிக்க முன்வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “சில மாதங்களுக்கு முன்பு, தேர்தல் நடக்கவிருந்தபோது, ​​பெரிய அரசியல் வல்லுநர்கள் ஒடிசாவில் பாஜகவின் வாய்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்தனர், ஆனால் முடிவுகள் வந்ததும், அதே மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

Also Read: மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!

சில காலமாக நீங்கள் அனைவரும் பெரிய மாற்றத்தை உணர்கிறீர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்பட்டு, ஜனநாயகத்தின் அனைத்து மதிப்புகளும் நிராகரிக்கப்படுகின்றன. அதிகாரத்தை தங்கள் பிறப்புரிமையாகக் கருதுபவர்களுக்கு கடந்த பத்தாண்டுகளாக மத்திய அதிகாரம் இல்லை. இந்தச் சூழல் அவர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, அவர்கள் நாட்டுக்கு எதிராக சதி செய்வதில் மும்முரமாக உள்ளனர். இவர்கள் தங்கள் கோபத்தை பொதுமக்கள் மீது கொட்ட தொடங்கியுள்ளனர்” என பேசியுள்ளார்.

Also Read: ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தொடர்ந்து பேசிய அவர், “ நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்வதற்காக மக்களை தவறாக வழிநடத்த ஆரம்பித்துள்ளனர். இவர்களின் பொய்கள் மற்றும் வதந்திகளின் கடை 50-60 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது இந்த பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில், விழித்தெழுந்த குடிமக்களுக்கு, நாட்டை நேசிக்கும், அரசியல் சாசனத்தை மதிக்கும் பா.ஜ.க.வினருக்கு, இத்தகையவர்களின் செயல்களும், எண்ணங்களும் பெரும் சவாலாக மாறி வருகின்றன நாம் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பொய்யையும் நாம் வெளிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Latest News