5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பொய் செய்திகள்.. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய உத்தரவு

மத்திய அரசின் முடிவுகள், கொள்கைகள், சாதனைகள் குறித்து மக்களிடையே சரியாக எடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். அரசின் திட்டத்தில் உள்ள குறைகளை மையப்படுத்தியே எதிர்க்கட்சிகள் தங்கள் பரபரப்புரையை மேற்கொள்கின்றனர்.

பொய் செய்திகள்.. அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி முக்கிய  உத்தரவு
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Sep 2024 13:38 PM

பிரதமர் மோடி முக்கிய உத்தரவு: சமீபத்தில் நடந்த முடிந்த மக்களவை தேர்தல் பாஜக 240 இடங்களில் வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்று நினைத்த நிலையில், வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 2014, 2019ஆம் ஆண்டுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில், தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இந்த தேர்தல் பரப்புரையின்போது இரண்டு கட்சிகள் இடையே அனல் பறந்த பேச்சுகள் இருந்தன. காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்தது. இப்படியான சூழலில், பிரதமர் மோடி அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது, மத்திய அரசின் முடிவுகள், கொள்கைகள், சாதனைகள் குறித்து மக்களிடையே சரியாக எடுத்து செல்ல வேண்டும் என அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். அரசின் திட்டத்தில் உள்ள குறைகளை மையப்படுத்தியே எதிர்க்கட்சிகள் தங்கள் பரபரப்புரையை மேற்கொள்கின்றனர்.

Also Read: புருனேவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர்.. 3 நாள் பயணத்தின் முக்கியத்துவம் என்ன?

அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு:

அரசின் செயல்பாடுகள், நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் கிளப்புகின்றனர். தங்கள் வேலைகள் குறித்த சரியான விவரங்கள் மக்களிடையே சென்று சேருகிறதா என்பதை உறுதி செய்ய மோடி அரசு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. மக்களிடையே நம்பிகையும், நம்பகத்தன்மையையும் பெறுவதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்களை வைத்தாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். குறிப்பாக பாஜக அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்வதாக கூறி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தனர் என்றார். மேலும், பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினரின் நலனுக்கு அச்சுறுத்தலாக  இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டியாக பிரதமர் மோடி கூறினார்.

இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சரியான பதிலை மக்களுக்கு அளிக்க வேண்டும் என பிரதமர்  மோடி வலியுறுத்தி உள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார். எந்த திட்டத்தை பற்றியும் நல்ல தகவல்களை மக்களுக்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்.

Also Read: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. 11 பேர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி காரணம்!

இல்லையென்றால் அதை பற்றிய பொய்யான தகவல்கள் பரவும் என்றார். இதை தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு முடிவுரை எழுதுவது, மக்களிடம் உண்மைகளை கொண்டு செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற காரணங்களுக்காக பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Latest News