5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PM Modi: சிலை உடைந்த சம்பவம்.. சிவாஜியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி!

சத்ரபதி சிவாஜி என்பது நமக்கு வெறும் பெயர் மட்டும் அல்ல. காற்று, மழையில் சிலை சேதம் அடைந்ததற்கு எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம்  தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தாயின் தவப்புதல்வனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

PM Modi: சிலை உடைந்த சம்பவம்.. சிவாஜியிடம் மன்னிப்பு  கேட்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Aug 2024 16:12 PM

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி:  மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி, மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலை கடந்த 26ஆம் தேதி திடீரென சரிந்து விழுந்து சுக்குநூறானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சத்ரபதி சிவாஜி என்பது நமக்கு வெறும் பெயர் மட்டும் அல்ல. காற்று, மழையில் சிலை சேதம் அடைந்ததற்கு எனது கடவுள் சத்ரபதி சிவாஜியிடம்  தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தாயின் தவப்புதல்வனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: வெள்ளக்காடாய் மாறிய குஜராத்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..

சிலை உடைந்த சம்பவம்:

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டததில் உள்ள ராஜ்கோட்டையில் 2023ஆம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ஆம் தேதி அன்று சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடற்படை தினத்தில் வீர வணக்கத்தின் நினைவுச் சின்னமாக இந்த சிலை அங்கே அமைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக 35 அடி உயரம் உள்ள சிவாஜி சிலை ஒடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.

Also Read: மூதாட்டி மற்றும் சிறுவன் மீது காவலர்கள் கொலைவெறி தாக்குதல்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி!

தரமற்ற பொருட்களை கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டதால் தான் ஒடிந்து விழுந்துவிட்டதாக எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டினர். ஆனால் சிலையை நாங்கள் வைக்கவில்லை என்றும் கடற்படை தான் வைத்தது என்றும் மாநில அரசு கூறியது. இந்த சிலை சேதம் அடைந்தது குறித்து கடற்படை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் சிலையை உருவாக்கிய சிற்பி ஜெய்தீப் மற்றும் ஒப்பந்ததாரர் சேதன் பாட்டீல் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பபட்டுள்ளது. இப்படியான சூழலில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு  கேட்டிருக்கிறார்.

Latest News