5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்தியாவின் முதல் ராணுவ விமான உற்பத்தி ஆலை.. குஜராத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி..

சி-295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில் 16 விமானங்களை ஸ்பெயின் விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் வழங்கி வருகிறது. இதன் பிறகு, மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் பொறுப்பு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் ராணுவ விமான உற்பத்தி ஆலை.. குஜராத்தில் திறந்து வைத்த பிரதமர் மோடி..
குஜராத்தில் திறந்து வைக்கப்பட்ட விமான உற்பத்தி ஆலை
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 15:37 PM

பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் வடோதராவில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸுடன், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) வளாகத்தில் டாடா விமான வளாகத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – ஸ்பெயின் இடையேயான உறவுகளுக்கு புதிய திசையை ஏற்படுத்தி வருகிறது என தெரிவித்தார். டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடாவை நினைவு கூர்ந்த பிரதமர், ரத்தன் டாடா இன்று நம்மிடையே இருந்திருந்தால், அவர் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்றும் சி 295 தொழிற்சாலை புதிய இந்தியாவை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சி-295 விமானம்:


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், ” எனது நண்பர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. இந்தியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான கூட்டாண்மைக்கு இன்று முதல் புதிய திசையை வழங்குகிறோம். சி 295 போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்க உள்ளோம். இந்தியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, இந்த தொழிற்சாலை மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட் மிஷனையும் வலுப்படுத்தப் போகிறது. ஒட்டுமொத்த டாடா குழுவிற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.


சி-295 திட்டத்தின் கீழ் மொத்தம் 56 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில் 16 விமானங்களை ஸ்பெயின் விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் வழங்கி வருகிறது. இதன் பிறகு, மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் பொறுப்பு டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை பாராட்டிய ஸ்பெயின் அதிபர்:

இதன்போது, ​​ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், ” இன்று நாம் நவீன தொழில்துறையை மட்டும் துவக்கி வைக்கவில்லை. இரண்டு முன்னணி நிறுவனங்களுக்கு இடையே ஒரு அசாதாரண திட்டம் எப்படி தொடங்கப் போகிறது என்பதையும் இன்று நாம் பார்க்கிறோம். பிரதமர் மோடியைப் பாராட்டிய ஸ்பெயின் அதிபர், பிரதமர் மோடி, இது இந்தியாவுக்கான உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த மற்றொரு வெற்றி. இந்தியாவை ஒரு தொழில்துறை சக்தியாக மாற்றுவது மற்றும் முதலீடு மற்றும் வர்த்தகத்தை அதிகரிப்பதே உங்கள் பார்வை.

மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்வு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

ஏர்பஸ் (ஸ்பெயினின் விண்வெளி நிறுவனம்) மற்றும் டாடா இடையேயான இந்த கூட்டு இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த திட்டம் உலகின் இரண்டு சிறந்த நிறுவனங்களை ஒன்றிணைத்துள்ளது. இந்தியாவின் தொழில்துறையின் வலிமையின் சின்னமாக டாடா திகழ்கிறது. அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன” என தெரிவித்தார்.

ஸ்பெயினின் முன்னணி விண்வெளி நிறுவனமான ஏர்பஸ் குறித்து அவர் கூறுகையில், ”ஏர்பஸைப் பொறுத்த வரையில், இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் புதிய அத்தியாயத்தை ஏர்பஸ் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான கைத்தொழில் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடக்க விழாவில், டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், ” இன்று முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை இங்கிருந்து வழங்குவோம் என்று பிரதமர் மோடிக்கு உறுதியளிக்கிறேன். இந்த விமானத்தை தயாரிப்பதற்காக டாடா குழுமத்தின் 200 பொறியாளர்கள் ஏற்கனவே ஸ்பெயினில் பயிற்சி எடுத்து வருகின்றனர்” என தெரிவித்தார்.

Latest News