செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. கொல்கத்தா மருத்துவர் கொலையை தொடர்ந்து வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
Sexual Harassment | உத்தராகாண்ட் மாநிலம் கடார்பூர் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான செவிலியர். இவர், நைனிதால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது 11 வயது மகளுடன் வசித்து வந்த அவர், இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை : கொல்கத்தாவில் 31 வயதான முதுநிலை டாக்டர் பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவமனை வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களும், பரப்பும் அடங்குவதற்குள் அதேபோன்ற மேலும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Monkey Pox: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்..
மருத்துவர் படுகொலையை அடுத்து செவிலியர் படுகொலை
உத்தராகாண்ட் மாநிலம் கடார்பூர் இஸ்லாம் நகர் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான செவிலியர். இவர், நைனிதால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தனது 11 வயது மகளுடன் வசித்து வந்த அவர், இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் செலிவியர் காணாமல் போன நிலையில், அவரது சகோதரி அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை திருடிச் சென்ற குற்றவாளி
அதற்கு ஒரு வாரம் கழித்து, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காலி கட்டத்தில் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மேந்திர என்ற கூலி தொழிலாளி, செவிலியரை புதருக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு அவரை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி அந்த பெண் அணிந்திருந்த நகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க : பாகிஸ்தானை உலுக்கிய கொடூரம்.. பெல்ஜியம் பெண்ணை 5 நாள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி..
திருடுப்போன மொபைல் போன் மூலம் சிக்கிய குற்றவாளி
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், செவிலியர் பணி முடிந்து வீடு திரும்பும் வழியில் மாயமானதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து செவிலியரின் தொலைந்துப்போன மொபைல் போனை கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், நான் நகைகளை பறிக்கும் நோக்கில் தான் அந்த பெண்ணை தாக்கினேன். பிறகு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.