5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: குழந்தையை கொன்ற தாய்.. பிறந்த 6 நாட்களில் கொடூரம்.. அதிரவைத்த காரணம்!

பிறந்த 6 நாட்களே ஆன குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் அவமானம் தாங்காமல் குழந்தையை கொலை செய்ததாக அவர் கூறினார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது அவரை கழுத்து நெரித்ததாகவும், இதனால் குழந்தை மூச்சுதிணறி உயிரிழந்ததாக கூறினார்.

Crime: குழந்தையை கொன்ற தாய்..  பிறந்த 6 நாட்களில் கொடூரம்.. அதிரவைத்த காரணம்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 01 Sep 2024 18:50 PM

குழந்தையை கொன்ற தாய்: பிறந்த 6 நாட்களே ஆன குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோடு, கொலை செய்த குழந்தையை ஒரு பையில் போட்டு பக்கத்து வீட்டு மாடியில் தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஷிவானி (28). இவர் மேற்கு டெல்லி கியாலா என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார். இந்த நிலையில், கியாலா காவல்நிலையத்திற்கு நேற்று முன் தினம் குழந்தை காணவில்லை என்று அப்பெண்ணின் குடும்பத்தினர் ஒருவர் கூறியிருக்கிறார். இதனால், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் ஷிவானியிடம் விசாரணை நடத்தினர். அவர், கடந்த வாரம் தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதாக போலீசாரிடம் கூறினார்.

மேலும், சம்பவத்தன்று, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்கியதாகவும், மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது குழந்தைகள் என் பக்கத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து, போலீசார் அக்கம் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பெண் ஷிவானி வெளியே சென்று வந்தது போல் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

Also Read: வரதட்சணைக்காக காஃபியில் விஷம்.. இளம்பெண்ணை கொன்ற கணவன் குடும்பம்.. திடுக் வாக்குமூலம்!

இதுபற்றி போலீசார் அவரிடம் கேட்டதற்கு, தையல்களை அகற்ற மருத்துவமனைக்கு சென்றதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், விசாரணையில் பக்கத்து வீட்டின் கூரையில் மர்மமான முறையில் ஒரு பையை போலீசார் கண்டெடுத்தனர். அதில் குழந்தை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிரவைத்த காரணம்:

உடனே போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், குழந்தையின் தாய் ஷிவானியிடம் விசாரணையை தீவரப்படுத்தினர். அதில், அவர் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

விசாரணையில், புதிதாக பிறந்த குழந்தைகள் நான்காவது பெண் குழந்தை என்றும் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இறந்துவிட்டதாக அவர் கூறினார். மேலும், நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால் அவமானம் தாங்காமல் குழந்தையை கொலை செய்ததாக அவர் கூறினார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது அவரை கழுத்து நெரித்ததாகவும், இதனால் குழந்தை மூச்சுதிணறி உயிரிழந்ததாக கூறினார்.

Also Read: செல்ஃபி மோகம்.. இளம்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடைசியில் என்னாச்சு?

மேலும், குழந்தையை கொன்று ஒரு பையில் வைத்து பக்கத்து வீட்டின் கூரையில் தூங்கி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்தார்.  இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  குழந்தையை உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்த 6 நாட்களே ஆன குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News