5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கெஜ்ரிவால் மீது தாக்குதல்… சிக்கிய பாஜக நிர்வாகி… அதிரடி காட்டிய போலீஸ்!

Arvind Kejriwal : ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் ஒருவர் தண்ணீரை அவரது முகத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி அருகே பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்ணீர் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கெஜ்ரிவால் மீது தாக்குதல்… சிக்கிய பாஜக நிர்வாகி… அதிரடி காட்டிய போலீஸ்!
கெஜ்ரிவால் (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Nov 2024 21:08 PM

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது மர்ம நபர் ஒருவர் தண்ணீரை அவரது முகத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி அருகே பாத யாத்திரையில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மீது தண்ணீர் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சி தக்க வைக்க ஆம் ஆத்மி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான தேர்தல் பணிகளை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்

அந்த வகையில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இன்று டெல்லியில் உள்ள மால்விய நகரில் கெஜ்ரிவால் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களும் இருந்தனர்.

மேலும், அவருக்கு மால்வியா நகரில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பாத யாத்திரையின்போது அங்கிருந்த ஒரு நபர், கெஜ்ரிவால் மீது திடீரென தண்ணீரை வீசினார்.

இதை எதிர்பார்க்காத கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அங்கிருந்த தொண்டர்களும் பதறினர். அப்போது, பாதுகாப்புக்காக பணியில் இருந்த போலீசார் கெஜ்ரிவாலை தாக்கி நபரை பிடித்தனர். கைது செய்யப்பட்டவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

Also Read : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..

சிக்கிய பாஜக நிர்வாகி

கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய நபர் அசோக் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.   இந்த தாக்குதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டியுள்ளது.  மேலும், டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் ஆம் ஆத்ம் குற்றச்சாட்டியுள்ளது. டெல்லி முதல்வர் அதிஷி கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்திய நபர் பாஜக நிர்வாகி என்று கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல் தொடர்பாக மணீஷ் சிசோடியாவும் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், ”இன்று அவர் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாஜகவின் பதற்றத்தை காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய தாக்குதல்களுக்கு கெஜ்ரிவால் பயப்படவில்லை. இது ஜனநாயக விழுமியங்கள் மீதான தாக்குதல்” என்றார்.

இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் கூறுகையில், ”அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கெஜ்ரிவால் தனது பழைய யுக்தியை செய்யத் திரும்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒவ்வொரு அரசியல் வியூகமும் தோற்றுப் போய்விட்டது.

Also Read : மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!

இப்போது அவர் பழைய யுக்திக்கு திரும்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் இன்று என்ன புதிய விளையாட்டைத் தொடங்கினார் என்பதை அவரே சொல்ல வேண்டும். இந்த சம்பவத்தில் உண்மையை டெல்லி போலீசார் கொண்டு வர வேண்டும். அரசியல் பரப்புரைகளில் பாஜக ஒருபோதும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறையின் பாதையை எடுத்ததில்லை” என்று கூறினார்.

 

Latest News