5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video: வடை பாவால் வந்த வினை.. பட்டப்பகலில் தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பரபர வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வடை பாவ் சாப்பிட சென்ற வயதான தம்பதிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த தம்பதியினர் வடை பாவ் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்கு சென்ற நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

Watch Video: வடை பாவால் வந்த வினை.. பட்டப்பகலில் தம்பதிக்கு  நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பரபர வீடியோ!
வீடியோ காட்சி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 31 Aug 2024 17:24 PM

வடை பாவால் வந்த வினை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வடை பாவ் சாப்பிட சென்ற வயதான தம்பதிகளிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இருசக்கர வாகனத்தில் வந்த அந்த தம்பதியினர் வடை பாவ் சாப்பிடுவதற்கு ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். வடை பாவ் வாங்குவதற்காக கடைக்குள் முதியவர் சென்றிருக்கிறார். அந்த பெண் இருசக்கர வாகனத்தை பார்க் செய்துவிட்டு அருகே நின்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர், பைக்கில் வைத்திருந்த நகை பைகளை எடுத்து சென்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவும் வெளியாகியது. அந்த வீடியோவில், நேற்று மதியம் வங்கியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடையில் வடை பாவ் சாப்பிட மூத்த தம்பதியினர் நின்றிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Also Read: நாற்காலியில் கட்டி வைத்து டார்ச்சர்.. கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடன ஆசிரியை.. பகீர் பின்னணி!

தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

வடை பாவ் வாங்குவதற்காக முதியவர் கடைக்குள் நுழைகிறார். அந்த பெண் பைக் அருகே காத்திருக்கிறார். ஒரு சில வினாடிகளியே, முகமூடியுடன் பைக்கில் ஒரு நபர் வருகிறார். இருசக்கர வாகனம் அருகே நின்று சாலையில் ஏதோ விழுந்துவிட்டதாக அந்த பெண்ணிடம் கூறிகிறார். இந்த நேரத்தில் வெள்ளை சட்டை அணிந்த மற்றொருவர் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வருகிறார்.

Also Read: நிற்காத ரயிலுக்கு மக்கள் டிக்கெட் எடுத்த கதை தெரியுமா?

அந்த மூதாட்டி பொருளை எடுக்க குணிந்தவுடன் பைக்கில் வந்த வெள்ளை சட்டை அணிந்தவர் பையில் வைத்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். உடனே அந்த நபரின் பின்னால் ஓடுவதையும், உதவிக்காக அலறுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பையில் மொபைல் போன், ஆவணங்கள் இருந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Latest News