5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ratan Tata Demise: ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றை உயிரிழந்தார்.

Ratan Tata Demise: ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..
ரத்தன் டாடா
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Oct 2024 10:16 AM

ரத்தன் டாடாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடகம் செய்யப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றை உயிரிழந்தார். ரத்தன் டாடா தனது 86வது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு தொழில்திபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ரத்தன் டாடாவின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். ரத்தன் டாடா, இந்திய தொழில்துறையின் உண்மையான டைட்டன் மற்றும் பணிவு மற்றும் இரக்கத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார்.

அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது, ஆனால் அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். இழப்பின் இந்த ஆழ்ந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


ரத்தன் டாடாவின் மறைவிற்கு மகாராஷ்டிரா அரசு இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், மூத்த தொழிலதிபர் பத்ம விபூஷண் நினைவாக மாநிலத்தில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இது அரசின் இறுதிச் சடங்காக அனுசரிக்கப்படும். இந்த காலகட்டத்தில், மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் தாழ்த்தப்படும் மேலும் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது. ரத்தன் டாடாவை அரசு விழாவில் தகனம் செய்ய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: எளிமையின் இலக்கணம்.. ரத்தன் டாடாவின் மறைவும் அவர் கடந்து வந்த பாதையும்.. ஓர் அலசல்..

இறுதிச் சடங்கு விவரம்:

ரத்தன் டாடாவின் உடல் சுமார் மாலை 4 மணியளவில் வொர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு வரப்படும், ஆரம்பத்தில் அது பிரார்த்தனை மண்டபத்தில் வைக்கப்படும், சுமார் 200 பங்கேற்பாளர்கள் 45 நிமிடங்கள் பிரார்த்தனை சேவையில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் முடிந்து உடல் மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

மேலும், ரத்தன் டாடாவின் உடல், காலை 10:30 மணிக்கு மும்பையில் உள்ள நரிமன் பாயிண்ட், என்சிபிஏ லான்ஸுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எடுத்துச் வைக்கப்படும். பொது உறுப்பினர்கள் கேட் 3 இலிருந்து NCPA புல்வெளிக்குள் நுழையலாம் மேலும், வெளியேறும் பாதை கேட் 2 இல் அமைக்கப்பட்டுள்ளது.

Latest News