5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lpg Gas: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

மகாராஷ்டிரா பட்ஜெட்: மகாராஷ்டிராவில் வரும் அக்டோபார் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரான அஜித் பவார் இதனை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 5 பேர் கொண்ட தகுதியுடைய குடும்பத்தினருக்கு ஆண்டுதோறும் 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்பு வசதிகளை வழங்குவதற்காக 'காவ்ன் தித்தே கோடம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lpg Gas: ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்டிரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 29 Jun 2024 12:07 PM

இலவச கேஸ் சிலிண்டர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அம்மாநில பட்ஜெட்டில் பல்வேறு இலவச அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரான அஜித் பவார் தாக்கல் செய்தார். நிதி அமைச்சராக இருக்கும் அஜித் பவார், சட்டசபையில் தனது பட்ஜெட் உரையில், “முக்யமந்திரி மஜி லட்கி பஹின் யோஜனா” திட்டம், அக்டோபரில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னதாக ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார். இத்திட்டத்திற்காக ரூ.46,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ‘முக்யமந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தின் கீழ், ஐந்து பேர் கொண்ட தகுதியுள்ள குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.

Also Read:  தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்..

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:

  • 21 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,500 என்ற நிதி உதவி வழங்கப்படும்
  • ‘முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா’ ஜூலை முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஆண்டுக்கு ரூ. 46,000 கோடி நிதி ஒதுக்கீடு பெறும்.
  • மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பருத்தி மற்றும் சோயாபீன் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.5,000 போனஸாக அரசாங்கம் வழங்கும்.
  • ஜூலை 1 ஆம் தேதி முதல் பால் பண்ணையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 5 போனஸ் மாநில அரசு வழங்கும்.
  • ‘முக்யமந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தின் கீழ், தகுதியுடைய ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
  • விலங்குகள் தாக்கி உயிரிழப்பவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
    மகாராஷ்டிராவில் இருக்கும் 44 லட்சம் விவசாயிகளுக்கு மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்
  • ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் வரை உள்ள ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் தொழில்முறை படிப்புகளுக்குச் செலுத்தும் கல்வி மற்றும் தேர்வுக் கட்டணம் முழுமையாக அரசால் திருப்பி அளிக்கப்படும்
  • மகாராஷ்டிரா அரசு மும்பை பெருநகரப் பகுதியில் எரிபொருள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) குறைத்துள்ளது, இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 65 பைசாவும், டீசல் லிட்டருக்கு 2.60 ரூபாயும் குறைக்கப்படும்.
  • மாநிலத்தில் 18 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அஜித் பவார் அறிவித்துள்ளார். 18 மாவட்டங்களில் 430 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளுடன் 100 மாணவர்கள் சேர்க்கும் திறன் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
  • விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்பு வசதிகளை வழங்குவதற்காக ‘காவ்ன் தித்தே கோடம்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும், மேலும் 100 புதிய குடோன்கள் கட்டப்பட்டு, ஏற்கனவே உள்ள குடோன்களை பழுதுபார்க்கும் பணிகள் முதல் கட்டமாக மேற்கொள்ளப்படும்.

Also Read: ஜியோ, ஏர்டல் வரிசையில் வோடாஃபோன்.. அதிரடியாக உயர்ந்த ரிசார்ஜ் கட்டணம்..!

Latest News