Wayanad Earthquake: அடுத்த அதிர்ச்சி… வயநாட்டில் நில அதிர்வு.. அச்சத்தில் கேரள மக்கள்!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் நென்மேனி பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10.15 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. வைத்திரி தாலுக்காவில் உள்ள அன்னப்பாறை, தாழத்து வயல், பினாங்கோடு, நென்மேனி ஆகிய பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது.
வயநாட்டில் நில அதிர்வு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வயநாடு மாவட்டததில் நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், வயநாடு மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் நென்மேனி பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 10.15 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது. வைத்திரி தாலுக்காவில் உள்ள அன்னப்பாறை, தாழத்து வயல், பினாங்கோடு, நென்மேனி ஆகிய பகுதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக கூறப்படுகிறது. நில அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து சாலைகளில் பதற்றத்தில் ஓடி வந்தனர். நில அதிர்வு ஏற்பட்ட இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வயநாடு மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: வக்பு வாரியம் என்றால் என்ன? அதிகாரங்கள், சட்டதிருத்த மசோதா குறித்த முழு விவரம்!
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வயநாடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குற்றியர்மலை, பிணங்கோடு, மொரிகாப், அம்புகுத்திமலை, எடக்கல் குஹா பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், வயநாட்டில் நில அதிர்வு எதுவும் இல்லை என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) மறுத்துள்ளது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு அதிகாரி கூறுகையில், “வயநாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை எந்த நில அதிர்வு நடவடிக்கையும் பதிவாகவில்லை. பயங்கர சத்தத்தை கேட்ட அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உள்ளோம்” என்றார்.
வயநாட்டை உலுக்கிய சம்பவம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வயநாட்டில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டது. ஒரு மலையே மண்ணுக்குள் புதைந்துள்ளது. சுமார் ஒரு வார காலமாகியும் இன்னும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பலரது உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. நிலச்சரிவால் மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
Also Read: மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்!
மலை அடிவாரத்தை ஒடியுள்ள 3 கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளன. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 150 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.