Jammu Kashmir Election: 10 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்.. ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்ப்பு!
Jammu Kashmir Assembly Election Date: பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைந்த மாநிலமாக ஜம்மு காஷ்மீர் எதிர்கொண்ட கடைசி தேர்தல் இதுவாகும். இதன்பிறகு 2019ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றைக் காரணம் காட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது.
10 ஆண்டுகளுக்கு பிறகு..
அத்துடன் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேகங்களாக மாற்றியது. இந்த சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட விசாரணைக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது சட்டப்படி செல்லும் என தெரிவித்திருந்தது. மேலும், 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீருக்கு 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முனைப்போட்டி:
ஜம்மு காஷ்மீரில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கசி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 28 இடங்கள் மற்றும் 23.85% வாக்குகளைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
Also Read: பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு.. செம்ம அறிவிப்பு!
பாஜக 25 இடங்களையும், தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களையும் பிடித்தது. எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பாஜகவும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி 4 ஆண்டுகள் நீடித்த நிலையில், அதன்பிறகு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதையடுதது, ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.