ISRO SSLV D-3: இஸ்ரோவின் அடுத்த சாதனை.. வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்..
SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து இன்று காலை 9.17 மணிக்கு EOS 8 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மேலும் SSLV தொடரில் இது கடைசி செயற்கைக்கோளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8 (EOS-8) இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் இன்று காலை 3.17 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக நேற்று இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைக்கோள் சிறிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. மைக்ரோசாட்லைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை இந்த செயற்கைக்கோளின் முதன்மையான பணியாக இருக்கும்.
#WATCH | ISRO (Indian Space Research Organisation) launches the third and final developmental flight of SSLV-D3/EOS-08 mission, from the Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh.
(Video: ISRO/YouTube) pic.twitter.com/rV3tr9xj5F
— ANI (@ANI) August 16, 2024
175.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு முதல் பேரிடர் மேலாண்மை வரை பல்வேறு களங்களில் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட மூன்று பேலோடுகளை சுமந்து சென்றது. இந்த விண்கலம், 475 கி.மீ உயரத்தில், ஒரு வட்டமான லோ எர்த் ஆர்பிட்டில், சுமார் ஒரு வருட காலம் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எங்கே தெரியுமா?
SSLV என்பது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் திறன் கொண்ட மூன்று-நிலை, குறைந்த விலை ஏவுகணை வாகனமாகும். SSLV-D1 மற்றும் SSLV-D2 பயணங்கள் முறையே ஆகஸ்ட் 2022 மற்றும் பிப்ரவரி 2023 இல் EOS-02 மற்றும் EOS-07 ஆகிய இரண்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து இன்று காலை 9.17 மணிக்கு EOS 8 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மேலும் SSLV தொடரில் இது கடைசி செயற்கைக்கோளாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: குரங்கு அம்மை பரவல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தல்..
EOS-08 மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (EOIR), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) மற்றும் SiC UV டோசிமீட்டர் ஆகியவை அடங்கும். மேலும் இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.