Ratan Tata Funeral : விடைபெற்றார் ரத்தன் டாடா.. அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கு!
Worli Crematorium | ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசாங்கம் சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் NCPA வளாகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ஏராளமான பொதுமக்கள் ரத்தன் டாடாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடவின் உடலுக்கு ஓர்லி மயானத்தில் இறுதிச் சடங்கு நடந்தது . அவர் பார்சி மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த மதத்தின்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது. இந்துக்கள் உடலை தகனம் செய்கின்றனர். இஸ்லாம் மற்றும் கிறித்துவம் அடக்கம் செய்யும் நிலையில், பார்சி மதத்தினர் தனித்துவமான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அதாவது, பார்சி மதத்தினர் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ மாட்டார்கள். நெருப்பு, நீர், பூமியை மாசுபடுத்தாத வகையில் இறுதிச் சடங்கு நடத்தப்படும்.
அதன்படி, பறவைகளுக்கு உணவாக்கும் dokhmenashini முறையில் இறுதிச் சடங்கு நடக்கும். அப்படி தான் ரத்தா டாடா உடலுக்கு இறுதிச் சடங்கு நடந்தது. ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசு சார்பாக, அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து, பார்சி முறைப்படி இறுதி சடக்கு நடத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Ratan Tata: ரூ.3,800 கோடி சொத்து.. டாடா குழுமத்தை ஆளப்போகும் அடுத்த வாரிசு யார்?
ரத்தன் டாடா கடந்துவந்த பாதை
கடந்த 1937 ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஆரம்ப காலக்கத்தில் சவாலான சூழல்களை சந்தித்த டாடாவுக்கு அதுவே வாழ்க்கை பாடமாக மாறியது. இதனால் பக்குவமடைந்த அவர், தொழில் வளர்ச்சியிலும் தனது அனுபத்தை நிலைநாட்டினார். அதன்படி, கடந்த 1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த அவர், டாடா மோட்டர்ஸில் பணியாற்ற தொடங்கினார். தனது திறமையால் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக உருவானார் ரத்தன் டாடா. அதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தார்.
ரத்தன் டாடா சிறந்த தொழிலதிபர் மட்டுமன்றி, ஏழைகளின் காப்பாளராகவும் திகழ்ந்தார். ரத்தன் டாடா தனது சாமார்த்தியத்தால் குடும்ப வருமானத்தை மிகப்பெரிய சாம்ராஜிமாக மாற்றிய பெருமை கொண்டவர். அவர் டாடா குழுமத்தில் பொருப்பில் இருந்தபோது பல முன்னேற்றங்களை செய்தார். குறிப்பாக கடந்த 1911 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், டாடா குழுமம் சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட செய்தார்.
இதையும் படிங்க : Ratan Tata : வெறும் $5 பில்லியன் சொத்துக்களை $100 பில்லியனாக மாற்றிய ரத்தன் டாடா!
இறப்பு வரையிலும் எளிமையாய் வாழ்ந்த ரத்தன் டாடா
கடந்த சில நாட்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், குடும்ப தொழிலில் இருந்து விலகி இருந்தார் ரத்தன் டாடா. சுமார் 23 ஆண்டுகள் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்து 100 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்தபோதிலும் ரத்தன் டாடா தனது எளிமையை கைவிடவில்லை. தனது முதுமை காலத்தில் வாடகை வீட்டில் வசிப்பதாக இணையத்தில் வெளியான ரத்தன் டாடாவின் புகைப்படங்கள், அவர் மீது மக்களுக்கு இருந்த அன்பையும், மரியாதையையும் உயர்த்தும் விதமாக இருந்தது.
மிகவும் சாதரனமாக நடந்துக்கொள்வது, பொதுமக்கள் மற்றும் விலங்குகள் மீது அதீத அன்பு செலுத்துவது, வணிகம், பணத்தை தாண்டி கொடையை முதன்மையாக பின்பற்றியது என ரத்தன் டாடாவின் செயல்கள் மக்கள் மத்தியில் ஆழமாக பதிய தொடங்கின. பல்வேறு தொழிலதிபர்கள் கடும் விமர்சனங்களையும், அவர்களின் பெயர்கள் மோசடி புகார்களில் சிக்கியபோதும் எந்த வித விமர்சனமும் இல்லாமல் மக்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்தார் ரத்தன் டாடா.
இதையும் படிங்க : Ratan Tata Demise: எளிமையின் இலக்கணம்.. ரத்தன் டாடாவின் மறைவும் அவர் கடந்து வந்த பாதையும்.. ஓர் அலசல்..
உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த ரத்தன் டாடா
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர், மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரத்தன் டாடாவின் மறைவு இந்திய மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இதையும் படிங்க : Ratan Tata Passed Away : தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
ரத்தன் டாடாவின் உடலுக்கு மகாராஷ்டிரா அரசாங்கம் சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் NCPA வளாகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ஏராளமான பொதுமக்கள் ரத்தன் டாடாவின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஓர்லி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரத்தன் டாடாவின் உடல், பார்சி முறைப்படி இறுதி சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.