5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gujarat Rains: வெள்ளக்காடாய் மாறிய குஜராத்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..

கச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திரநகர், ஜூனாகத், ராஜ்கோட், பொடாட், கிர் சோம்நாத், அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மைடம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு குஜராத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gujarat Rains: வெள்ளக்காடாய் மாறிய குஜராத்.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..
குஜராத் மழை
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Aug 2024 12:56 PM

குஜராத் கனமழை: குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு அரபிக்கடலை நோக்கி நகர்வதால் சௌராஷ்டிரா மற்றும் கச்சத் இடையே இது தீவிரமடைந்து, அப்பகுதி முழுவதும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்புப் பணிகள் மற்றும் மக்களை பாதுகப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு தொடர் மழை பதிவாகி வருகிறது. கனமழையால் குஜராத் மாநிலமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதில் சிக்கி தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குஜராத் அரசு பகிர்ந்துள்ள விவரங்களின்படி, மோர்பி, வதோதரா, பருச், ஜாம்நகர், ஆரவல்லி, பஞ்ச்மஹால், துவாரகா மற்றும் டாங் மாவட்டங்களில் குறைந்தது ஒருவரும், ஆனந்தில் 6 பேரும், அகமதாபாத்தில் 4 பேரும், காந்திநகரில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் ஏழு பேர், மோர்பி மாவட்டத்தில் உள்ள தவானா கிராமத்திற்கு அருகே நிரம்பி வழியும் தரைப்பாலத்தை கடக்கும்போது அவர்கள் பயணித்த டிராக்டர்-டிராலி அடித்துச் செல்லப்பட்டதால் காணாமல் போனவர்கள் என்று செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.


கச், துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திரநகர், ஜூனாகத், ராஜ்கோட், பொடாட், கிர் சோம்நாத், அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களை உள்ளடக்கிய கச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மைடம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வடக்கு, மத்திய மற்றும் தெற்கு குஜராத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை அழைத்து நிலைமையை மதிப்பீடு செய்து, மாநிலத்திற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என உறுதியளித்தார்.

Also Read: இந்தியாவில் அதிகரிக்கும் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு.. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

வதோதராவில் மழை நின்றுவிட்டாலும், விஸ்வாமித்ரி நதி கரையை உடைத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

Latest News