5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: “மிஸ் யூ அம்மா” தாயை கொன்ற மகன்.. சடலத்துடன் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்.. திடுக் சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் மகன் தாயைக் கொலை செய்து, அதை சோஷியல் மீடியாவில் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரடைந்த மகன், தாயை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Crime: “மிஸ் யூ அம்மா” தாயை கொன்ற மகன்.. சடலத்துடன் போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்.. திடுக் சம்பவம்!
மாதிரிப்படம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 Aug 2024 18:29 PM

தாயைக் கொன்ற மகன்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பகத்சிங்ஜி தோட்டத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் கோசாய் (21). இவரது தாய் ஜோதி பென் கோசாய். இவர் பல ஆண்டுகளாக மனநோயால் அவதிகப்பட்டு வந்துள்ளார். ஜோதிபென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் கடந்த ஓராண்டாக அவரது கணவரும், மற்ற குழந்தைகளும் அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் நிலேஷ் கோசாயும், அவரது தாய் ஜோதிபென்னும் சேர்ந்து தனியாக வசித்து வந்துள்ளனர். இவர் மனநலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டார். இது அவரது நிலையை மோசமாக்கியது. இதனால், ஜோதி பென்னுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் நிலேஷுக்கும், ஜோதி பென்னுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் வாக்குவாதம் கைகலப்பில் கூட முடிந்துள்ளதாம்.

Also Read: வடை பாவால் வந்த வினை.. பட்டப்பகலில் தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பரபர வீடியோ!

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்த நிலையில், நிஷேக் கடும் கோபம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, ஜோதிப் பென்னை கத்தியால் குத்துவதற்கு முயன்றுள்ளார். ஆனால் ஜோதி பென் அவரை தடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிலேஷ் அவரது கழுத்தை போர்வையால் நெரித்துள்ளார். இதில் ஜோதி பென் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலத்துடன் போட்டோ எடுத்து ஸ்டேட்ஸ் வைத்த கொடூரம்:

தாயைக் கொன்ற நிலேஷ் சிறிது நேரம் சடலத்துடன் அமர்ந்திருந்தார். பின்னர், தனது தாயைக் கொலை செய்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். சடலத்துடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் ஸ்டேட்டஸாக பதிவிட்டார். அந்த பதிவில், ”அம்மா நான் உங்களை கொன்றுவிட்டேன். அதனால் என் வாழ்க்கையை இழந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, மிஸ் யூ அம்மா. ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: நாற்காலியில் கட்டி வைத்து டார்ச்சர்.. கொடூரமாக கொல்லப்பட்ட இளம் நடன ஆசிரியை.. பகீர் பின்னணி!

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் நிலேஷின் வீட்டிற்கு விரைந்து சென்று ஜோதி பென்னின் சடலத்துடன் நிலேஷ் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து, ஜோதி பென்னின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான நிலேஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதி பென்னின் சடலத்தைப் பெற்றுக் கொள்ள அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மனநல பாதிக்கப்பட்ட தாயை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Latest News