5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kerala: விளக்கேற்ற சென்ற ஆளுநர்.. திடீரென பற்றிய தீ.. பதறிய அதிகாரிகள்!

Arif Mohammed Khan: நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் அனைத்து மாநிலங்களிலும்  சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார்.

Kerala: விளக்கேற்ற சென்ற ஆளுநர்.. திடீரென பற்றிய தீ.. பதறிய அதிகாரிகள்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 01 Oct 2024 14:57 PM

கேரளா: கேரளாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆரிப் முகமது கானின் சால்வையில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நாளை மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் அனைத்து மாநிலங்களிலும்  சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்றார். சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க காலை 10.45 மணியளவில் ஆளுநர் வருகை தந்தார். மகாத்மா காந்தி கேரளாவின் பாலக்காடு வரும்போதெல்லாம் தங்கிய இடம் இந்த ஆசிரமம் ஆகும். இங்கு அவர் தங்கிய அறையை சென்று ஆளுநர் ஆரிப் முகமது கான் பார்வையிட்டார்.

Also Read: iPhone 15 : ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்.. அதிரடி சலுகை.. மிஸ் பன்னிடாதீங்க!

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி ஆளுநர் ஆரிப் முகமது கான் மரியாதை செலுத்துவார் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர் மலர் தூவி மரியாதை செலுத்தியதை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றினார். அப்போது விளக்கேற்றிக் கொண்டே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவரது கழுத்தில் இருந்த சால்வையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதனைக் கண்டு ஒரு கணம் நிக்ழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அருகில் இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆளுநரின் தனி பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரும் காயம் என்று தப்பியதாகவும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

சென்னையில் தமிழக ஆளுநர் தூய்மைப்பணி

இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அக்டோபர் 2 ஆம் தேதியான நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக மாணவ, மாணவியர்களுடன் இணைந்து குப்பைகளை பற்றி ஆளுநர் சுத்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நாளை காந்தி ஜெயந்தி முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2.55 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளதாகவும், இதில் சப்ஜி யோஜனா சப்கா விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read: Food Recipes: 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 2 சூப்பர் ரெசிபி.. சூடான சோறுடன் சாப்பிட ஜோராக இருக்கும்!

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் மேம்பாட்டு திட்டத்தை உருவாக்குதல், தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா போன்ற அரசின் அனைத்து முதன்மை திட்டங்களையும் அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இணையதளத்தில் வெளியிடுவதும் சப்ஜி யோஜனா சப்கா விகாஸ் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. இதற்காக டெல்லி ஐஐடியால் ஒருங்கிணைக்கப்பட்ட உன்னத் பாரத் அபியான் திட்டம் கீழ் 20 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Latest News