5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“என்னை இன்னும் வலிமையாக்குது” அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அதானி பதிலடி!

Gautam Adani: அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு கவுதம் அதானி இன்று  பதிலடி கொடுத்துள்ளார்.  அமெரிக்காவிடமிருந்து பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம் என்றும் இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல என்றும் அதானி விளக்கம் அளித்துள்ளார். 

“என்னை இன்னும் வலிமையாக்குது”  அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அதானி பதிலடி!
அதானி (picture credit : Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Nov 2024 23:09 PM

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு கவுதம் அதானி இன்று  பதிலடி கொடுத்துள்ளார்.  அமெரிக்காவிடமிருந்து பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம் என்றும் இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல என்றும் அதானி விளக்கம் அளித்துள்ளார்.  கடந்த 2020ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்ததில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் (ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்ததாக , இந்த லஞ்ச பணத்துக்காக தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டியிருந்தது. இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு அதானி பதிலடி

இந்த பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. ஒரே நாளில் அதானி குழுமத்தில் கோடிக்கணக்கில் சரிந்தது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரமற்றவை என்றும் அதானி குழுமம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த சூழலில். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு கவுதம் அதானி இன்று  பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த விருது விழாவில் அதானி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “கடந்த இரண்டு வாரங்களுக்கு அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைவருக்கும் தெரியும்.

இதுபோன்ற சவால்களை நாங்கள் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. அமெரிக்காவிடமிருந்து பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் வலிமையாக்குகிறது. ஒவ்வொரு தடையும் ஒரு படிக்கல்லாக மாறும். இன்றைய உலகில், உண்மைகளை விட எதிர்மறையானது வேகமாக பரவுகிறது.

Also Read : கெஜ்ரிவால் மீது தாக்குதல்… சிக்கிய பாஜக நிர்வாகி… அதிரடி காட்டிய போலீஸ்!

அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை. இந்தச் சவால்கள் என்னை உடைக்கவில்லை. மாறாக, அவை என்னை வலிமையாக்கியது. மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாங்கள் மீண்டும் எழுவோம். முன்பை விட நாங்கள் வலிமையாக மாறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

கடந்த 2020ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்ததில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர் (ரூ.2,100 கோடி) லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க அரசு குற்றச்சாட்டியுள்ளது.

மேலும், 2021-2023 க்கு இடையில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் இருந்து 3 பில்லியன் டாலர்கள் நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Also Read : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகள் நசுக்கப்படுகிறது – பிரதமர் மோடி..

கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி அதானி இந்திய அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி லஞ்சம் கொடுப்பதற்காக பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அதிகாரிகளை லஞ்சம் தருவதற்காக அதானி தொலைபேசியில் பேசியதற்காக ஆதாரங்களும் அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவுரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இந்தியாவில் அரசியல் புயலை கிளப்பியுள்ளது, அதானியை பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளால் ஒரே நாளில் 12 பில்லியன் டாலர்களை இழந்தார் அதானி என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News