Gandhi Jayanti: அகிம்சையின் அடையாளம் காந்தி.. பிறந்தநாளில் தலைவர்கள் மரியாதை!
மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் மோகன்தாஸ் கரம்சம் காந்தி பிறந்தார். அவர் பிறந்த தினம் உலக அகிம்சை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு அளப்பறியது. அகிம்சை முறையை பின்பற்றிய காந்தி நாட்டின் நலனுக்காக தன்னுயிரையே கொடுத்தார்.
காந்தி பிறந்த தினம்: காந்தி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் 2 ஆம் தேதி கொண்டாடப்படுவது என்பது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் கூட தெரியும். ஏன் காந்தி அனைவருக்கும் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் என்பது பற்றி நாம் காணலாம். . மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரில் மோகன்தாஸ் கரம்சம் காந்தி பிறந்தார். அவர் பிறந்த தினம் உலக அகிம்சை தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு அளப்பறியது. அகிம்சை முறையை பின்பற்றிய காந்தி நாட்டின் நலனுக்காக தன்னுயிரையே கொடுத்தார். அவரை தியாகத்தைப் போற்றும் வகையில் மத்திய அரசு இந்த தினத்தை நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அதிஷி மர்லினா உள்ளிட்ட தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
#WATCH | Delhi: President Droupadi Murmu pays tributes to Mahatma Gandhi on the occasion of his birth anniversary, at Rajghat.
(Source: DD) pic.twitter.com/VqhYKkGJwA
— ANI (@ANI) October 2, 2024
Also Read: Crime: மகனை கொன்ற தந்தை.. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. தமிழ்நாட்டை அதிர வைத்த சம்பவங்கள்!
காந்தியின் அகிம்சை கொள்கை
காந்தியடிகள் உணர்த்திய அகிம்சை வழிமுறை உலகில் பெரும்பான்மையான மக்களுக்கு இன்றளவும் ஊக்கமளித்து வருகிறது. காந்தி 1887 ஆம் ஆண்டு பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்று இங்கிலாந்து சென்று சட்டம் படித்து பாரிஸ்டர் ஆனார். இதனைத் தொடர்ந்து 1891 ஆம் ஆண்டு காந்தியடிகள் இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். இந்தியா திரும்பிய நிலையில் மகாத்மா காந்தி மும்பையில் ஒரு வழக்கறிஞராக தனது பயிற்சி தொடங்கினார். முதல்முறையாக ஒரு பெண்ணின் வழக்குக்காக வாதாடிய போது அவரது கட்டணம் ரூபாய் 30 ஆக இருந்தது. ஆனால் எதிர்தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்காக அப்பெண்ணிடம் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுத்து விட்டாராம். ஆறு மாதங்கள் மும்பையில் தங்கி இருந்த காந்தியடிகள் அதன் பின்னர் தனது வழக்கறிஞர் பணியை ராஜ்கோட்டில் தொடர திட்டமிட்டார்.
Also Read: TN Cabinet Meeting: அக்டோபர் 8ல் தமிழக அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு!
ரூபாய் நோட்டில் வாழும் காந்தி
ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு பின்னால் மிகப்பெரிய கதையை உள்ளது. 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி உயிரிழந்தார். 1969 ஆம் ஆண்டு அவரது நூற்றாண்டு பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு வெளியிடப்பட்ட நாணயத்தில் தான் முதன் முதலில் காந்தி படம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு அக்டோபரில் தான் முதல்முறையாக காந்தியின் உருவம் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. அதன் பின்னால் காந்தியடிகள் தண்டியாத்திரை செல்லும் புகைப்படமும் இடம் பெற்றது. இந்திய ரூபாய் நோட்டில் ஆரம்பத்தில் ஆங்கிலேய மன்னர்கள் படம் இடம் பெற்றுள்ளது. அது பின்னர் மாற்றம் அமைக்கப்பட்டு இந்தியாவின் அடையாள சின்னங்கள் இடம்பெற்றது. அந்த வகையில் மகாத்மா காந்தியின் உருவப்படமும் இருந்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து தான் அனைத்து ரூபாய் நோட்டிகளிலும் காந்தி படம் இடம் பெற்றது.