5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flipkart Big Billion: ஒரு லட்சம் பணியிடங்கள்… பிளிப்கார்ட் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

உலகளவில் பிரபலமான நிறுவனமாக பிளப்கார்ட் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கியமான தளமாக திகழும் இதனை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் பிக் பில்லியன் விற்பனை நிகழ்வை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பிளிப்கார்டில் 1,00, 000 பணியிடங்களை நிரப்ப போவதாகவும், நாட்டில் 11 இடங்களில் பிளிப்கார்ட் மையங்களை திறக்க போவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Flipkart Big Billion: ஒரு லட்சம் பணியிடங்கள்… பிளிப்கார்ட் நிறுவனத்தில் சூப்பர் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?
பிளிப்கார்ட் (Picture Courtesy: Twitter)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Sep 2024 07:31 AM

பிளிப்கார்ட்: உலகளவில் பிரபலமான நிறுவனமாக பிளப்கார்ட் (Flipkart) உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் முக்கியமான தளமாக திகழும் இதனை பொதுமக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆண்டுதோறும் பிக் பில்லியன் விற்பனை நிகழ்வை நடத்தி வருகிறது. திருவிழாக் காலங்களில் தொடங்கும் இந்த விற்பனையில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்து வகையான பொருட்களுக்கு சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த பிக்பில்லியன் விற்பனை நிகழ்வை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு இல்லாம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்களுக்காக அந்நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது, 1,00, 000 பணியிடங்களை நிரப்ப போவதாகவும், நாட்டில் 11 இடங்களில் பிளிப்கார்ட் மையங்களை திறக்க போவதாகவும் அறிவித்துள்ளது.

Also Read: மனுக்களை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு உருண்டு வந்த நபர்.. விரக்தியின் உச்சம்..

ஒரு லட்சம் பேருக்கு வேலை:

பிளிப்கார்ட் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு மட்டுமில்லாமல் முக்கிய நகரங்களில் பிளிப்கார்ட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் பிக் பில்லியன் நிகழ்வை முன்னிட்டு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை இந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் 4 பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, சரக்கு மேலாளர்கள் (Inventory Managers), கிடங்கு அசோசியேட்ஸ் (Warehouse Associates), லாஜிஸ்டிக்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் (Logistics Coordinators), கிரானா பார்ட்னர்கள் (Kirana Partners), டெலிவரி ஓட்டுநர்கள் (Delivery Drivers) ஆகிய பணிகளில் ஆட்களை நிரப்ப போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சம் பேரை பணிக்கு அமர்த்துப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: வெறும் ரூ.173-க்கு அன்லிமிடெட் பிளான் வழங்கும் ஜியோ.. இதுதான் பெஸ்ட்!

புதிதாக பணியமர்த்தப்படுபவர்களுக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிளிப்கார்ட்டின் மூத்த துணைத் தலைவர் ஹேமந்த் பத்ரியின் கூறுகையில், வாடிக்கையாளர் தேவைகளை மிகவும் திறமையாக பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது பிளிப்கார்ட். இதனால் விரிவாக்கம் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களுக்கு இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

பிக் பில்லியன் டேஸ் எப்போது?

இந்த ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த சேவை அன்றை கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் பொருட்களை வாங்கலாம் என்று தெரிகிறது. இந்த பிக் பில்லியன் விற்பனை ஒரு வாரத்திற்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

Latest News