5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Harsha Sai : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

Harassment Case | இந்தியாவின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் ஷர்ஷா சாய். மற்ற யூடியூபர்களை போல் உணவு ரிவியூ செய்வது, திரைப்படம் ரிவியூ செய்வது, நகைச்சுவை வீடியோ பதிவிடுவது என இல்லாமல் பொதுமக்களுக்கு உதவி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் ஷர்ஷா சாய்.

Harsha Sai : பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் புகார்.. இளம் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!
ஹர்ஷா சாய்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 25 Sep 2024 16:46 PM

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை குழந்தைகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் ஹர்ஷா சாய் மீது, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ஹர்ஷா சாய் தனது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த யூடியூபர் ஷர்ஷா சாய் யார், அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன, இந்த விவகாரம் குறித்து காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Tirupati Laddu : ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் போர்டு புகார்.. நிபந்தனைகளை மீறி கலப்படம் செய்ததாக புகார்!

இந்தியாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்

இந்தியாவின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் ஷர்ஷா சாய். மற்ற யூடியூபர்களை போல் உணவு ரிவியூ செய்வது, திரைப்படம் ரிவியூ செய்வது, நகைச்சுவை வீடியோ பதிவிடுவது என இல்லாமல் பொதுமக்களுக்கு உதவி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் ஷர்ஷா சாய். ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்கு உதவி செய்வது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வாங்கி கொடுப்பது, ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டி தருவது, சுயதொழில் செய்ய பணம் தருவது என பல்வேறு உதவிகளை செய்து அதனை வீடியோ பதிவு செய்து அதனை யூடியூபில் பதிவிட்டு வருகிறார். அவரது இரக்க குணத்திற்கு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமன்றி நடிகர்களுக்கு, அரசியல் தலைவர்களுக்கு பாடல்கள் உள்ளதை போலவே இவருக்கு சிறப்பு பாடல் ஒன்றும் உள்ளது. அந்த அளவிற்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார்.

இதையும் படிங்க : Harassment : ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்!

ஹர்ஷா சாய் மீது இளம் நடிகை பரபரப்பு பாலியல் புகார்

இந்த நிலையில் தான் ஹர்ஷா சாய் மீது 25 வயது ஆன இளம் நடிகை ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் தெலங்கானா மாநிலம், நர்சிங்கி காவல் நிலையத்தில் ஹர்ஷா சாய் மீது வழக்குப்பதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்த பெண், யூடியூபர் ஷர்ஷா சாய் தனது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் புகார் அளித்த அந்த இளம் நடிகை மருத்துவ பரிசோதைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து ஹர்ஷா சாய் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : School Leave: அப்படி போடு.. மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீடிப்பு.. வெளியான அறிவிப்பு..

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றினாரா?

இந்த விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் இருந்து வெளியான தகவலின் படி, புகார் அளித்த நடிகையும், ஹர்ஷா சாயும் இருவருக்கு பொதுவான நண்பரின் பார்டியில் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வதாக ஷர்ஷா சாய் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், ஷர்ஷா சாய் தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக அந்த இளம் பெண் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News