5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Assembly Elections: ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Jammu Kashmir, Haryana Assembly Election Date: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல்  கட்டம், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்டம், அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஹரியானாவில் அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assembly Elections: ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தேர்தல் ஆணையம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Sep 2024 08:39 AM

சட்டப்பேரவை தேர்தல்கள்: ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 18ஆம் தேதி முதல்  கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1ஆம் தேதி 3ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வேட்பு மனு தாக்கல் முதற்கட்டத்திற்கு ஆகஸ்ட் 27ஆம் தேதியும், 2ஆம் கட்டத்திற்கு செப்டம்பர் 5ஆம் தேதியும், 3ஆம் கட்டத்திற்கு செப்டம்பர் 12ஆம் தேதியும் தொடங்குகிறது. வேட்புமனு பரிசீலனை முதற்கட்ட தேர்தலுக்கு ஆகஸ்ட் 28, 2ஆம் கட்டத்திற்கு செப்டம்பர் 6ஆம் தேதியும், 3ஆம் கட்டத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி முதற்கட்டத்திற்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி, 2ஆம் கட்டத்திற்கு செப்டம்பர் 9ஆம் தேதி, மூன்றாம் கட்டத்திற்கு செப்டம்பர் 17ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இஸ்ரோவின் அடுத்த சாதனை.. வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்..

ஹரியானா மாநிலத்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை பரிசீலனை செப்டம்பர் 13ஆம் தேதியும், வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள் விவரங்கள்:

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளனர். அவற்றில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியில் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல்-பழங்குடிகளுக்கானது 9 உள்ளன. அங்கு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. அங்கு மொத்தம் 87.09 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 44.46 லட்சம் ஆண்கள், 42.62 லட்சம் பெண்கள், 3.71 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள், 20.07 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள் உள்ளனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதேபோல, ஹரியானாவில் ஹரியானாவில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. அவற்றில் 73 பொதுத் தொகுதிகள், தனித்தொகுதி எஸ்சி 17 உள்ளன. அங்கு மொத்தம் 2.01 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 1.06 கோடி பேர் ஆண்கள், 0.95 கோடி பேர் பெண்கள், 4.52 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள், 40.95 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள் உள்ளனர்.

Also Read: பெண்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு.. செம்ம அறிவிப்பு!

தேர்தல் குறித்து பேசிய தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார், “சமீபத்தில் நாங்கள் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கு சென்றிருந்தோம். அங்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மேலும் மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறி தங்களின் குரலினை உயர்த்த விரும்புகின்றனர். ஜனநாயகத்தின் இந்த பார்வை என்பது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறது” என்றார்.

Latest News