5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Did You Know: நிற்காத ரயிலுக்கு மக்கள் டிக்கெட் எடுத்த கதை தெரியுமா?

ரயில் பயணத்தில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது அபூர்வமான ஒரு செயலாகும். காரணம் சரியான நேரத்தில் கிளம்பும் ரயில்களை பிடிக்க குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நாம் ரயில்வே ஸ்டேஷனில் ஆஜராகி விடுவோம். அப்படி இருக்கும் நிலையில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் தினமும் நிற்காத ரயிலுக்கு டிக்கெட் வாங்கிய கதை நடைபெற்றுள்ளது.

Did You Know: நிற்காத ரயிலுக்கு மக்கள் டிக்கெட் எடுத்த கதை தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Aug 2024 19:00 PM

உங்களுக்கு தெரியுமா?: இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக ரயில் போக்குவரத்து திகழ்கிறது. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், வந்தே பாரத், அந்தோத்யா என பல வகைகளில் ரயில்கள் வெவ்வேறு கட்டணங்களுக்கு ஏற்ப இயக்கப்பட்டு வருகிறது. மேலே தெரிவிக்கப்பட்ட ரயில் வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊரை நின்று கடந்து செல்லும்படி அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இப்படியான ரயில் பயணத்தில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது அபூர்வமான ஒரு செயலாகும். காரணம் சரியான நேரத்தில் கிளம்பும் ரயில்களை பிடிக்க குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நாம் ரயில்வே ஸ்டேஷனில் ஆஜராகி விடுவோம். அப்படி இருக்கும் நிலையில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு வரை மக்கள் தினமும் நிற்காத ரயிலுக்கு டிக்கெட் வாங்கிய கதை நடைபெற்றுள்ளது. அந்த சுவாரஸ்யமான சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசும் பொருளாக மாறினாலும் அதனைப் பற்றி சின்னதாக ஒரு ரீவைண்ட் பார்ப்போம்.

பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காத ஊரில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக பாசஞ்சர்  ரயில்கள் இயக்கப்படுகிறது. இப்படியான நிலையில் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் நெக்கொண்டா ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியே திருப்பதி, ஹைதராபாத், டெல்லி, மற்றும் சீரடி போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சில நேரங்களில் சிக்னலுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் அது எப்போது என்றெல்லாம் தெரியாது.  இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று பயணிகள் பயன்படுத்துவது இல்லாமல் இருந்தது.

ஆனால் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக தங்கள் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அப்படியான நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியன் ரயில்வே தற்காலிகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து குண்டூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவித்து ஒரு நிபந்தனையை முன் வைத்தது. அதாவது அடுத்த மூன்று மாதங்களுக்கு ஸ்டேஷனில் வருமானம் கிடைத்தால் மட்டுமே ரயில் நின்று செல்வது உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர். அவ்வாறு நடக்காவிட்டால் இந்த ஸ்டேஷனில் எந்த ரயிலும் நிற்காது என கறாராக தெரிவித்துவிட்டனர்.

இப்படியான நிலையில் தங்களது நீண்ட நாள் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற வேண்டும் என நினைத்த நெக்கொண்டா ரயில் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் வாட்ஸ் அப்பில் நெக்கொண்டா டவுன் ரயில் டிக்கெட் ஃபோரம் என்ற குழுவை உருவாக்கி அதன் மூலம் நன்கொடை வசூலித்தனர். ரூ.25 ஆயிரம் பிரிந்த நிலையில் அந்தப் பணத்தை கொண்டு நெக்கொண்டாவில் இருந்து தினமும் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வருமானம் வருவதாக காட்டினர். தினமும் 60க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில் இங்கு எந்த ரயிலும்  நிற்காமல் இருந்து வந்தது. இப்படியான நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் செதந்திரபாத்-குண்டூர் இடையிலான இன்டர்சிட்டி ரயில் நெக்கொண்டா ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Latest News