Sitaram Yechury: சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
சீதாராம் யெச்சூரி காலமானார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி காலமானார்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி காலமானார். கடந்த ஆக்ஸ்ட் 19ஆம் தேதி காய்ச்சல் காரணமாக இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் உடல்நிலை மோசமான காரணத்தால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நைல கவலைக்கிடமாக இருந்து வந்தது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட யெச்சூரிக்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
CPI(M) General Secretary Sitaram Yechury passes away.
He was undergoing treatment for Pneumonia at AIIMS, New Delhi.
(file pic) pic.twitter.com/2feop1CKhw
— ANI (@ANI) September 12, 2024
Also Read: ரஷ்யா உக்ரைன் போர்.. இந்திய பொருளாதாரம் சந்தித்த மறைமுக சிக்கல்கள் என்ன?
யார் இந்த சீதாராம் யெச்சூரி?
சென்னையில் 1952ஆம் ஆண்டு பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. சென்னையில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. இவரது பெற்றோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். கல்லூரியில் படிக்கும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். டெல்லி ஐவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு இந்தியா காந்தி அவசர நிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் அவர் சிறையில் இருந்தார்.
1984ஆம் ஆண்டில் சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். சீதாராம் யெச்சூரில் 2005ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாக இருந்தார். இதில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பல முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று இந்த முறையும் மூன்றவாது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர்கள் இரங்கல்:
Sitaram Yechury ji was a friend.
A protector of the Idea of India with a deep understanding of our country.
I will miss the long discussions we used to have. My sincere condolences to his family, friends, and followers in this hour of grief. pic.twitter.com/6GUuWdmHFj
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2024
இப்படியான சூழலில், இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நமது நாட்டை பற்றி ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இநிதியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். அவருடனான நீண்டகால தொடர்பை இழந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “சிபிஐ(எம்) பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனை அளிக்கிறது. ஒரு அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவர் எனது நண்பராகவும் இருந்தார், அவருடன் நான் பலமுறை தொடர்பு கொண்டேன். அவருடனான எனது தொடர்புகளை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.