5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பா? பகீர் கிளப்பிய சந்திரபாபு நாயுடு.. என்ன நடக்கிறது?

Tirupati laddu controversy: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் தகவலை கூறியிருக்கிறார். அதிலும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுட தெரிவித்துள்ளார்.

Tirupati Laddu: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பா? பகீர் கிளப்பிய சந்திரபாபு நாயுடு..  என்ன நடக்கிறது?
சந்திரபாபு நாயுடு (picture Credit – PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Sep 2024 15:29 PM

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் தகவலை கூறியிருக்கிறார். அதிலும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுட தெரிவித்துள்ளார். நேற்று அமராவதியில் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஆந்திராவில் கடந்த ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய அரசின் கீழ் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலையும், திருப்பதி தேவஸ்தானத்தையும் நிர்வகித்து வந்தது.

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா?

கடந்த 5 ஆண்டுகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திருமலையின் புனிதத்தை கெடுத்துவிட்டனர். அன்னதானத்தின் தரத்தில் சமரசம் செய்து, புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி மாசுபடுத்தியுள்ளனர். நாங்கள் இப்போது பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் சுத்தமான நெய்யைப் பயன்படுத்துகிறோம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை பாதுகாக்க நாங்கள் பாடுபடுகிறோம்” என்று குற்றச்சாட்டினார் சந்திரபாபு நாயுடு. சந்திராபாபு நாயுடு முன்வைத்த கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஒய்வி சுப்பா ரெட்டி, திருமலை கோவிலின் புனிதத்தை நாயுடு சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

Also Read: துண்டு துண்டாக வெட்டப்பட்ட இளம்பெண்.. சூட்கேஸில் இருந்த உறுப்புகள்.. அதிர்ந்த சென்னை!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுப்பு:

இதுகுறித்து அவர் கூறுகையில், “சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் குறித்த அவரது கருத்துகள் மிகவும் தவறானது. யாரும் இதுபோன்ற வார்த்தைகளை பேச மாட்டார்கள் அல்லது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூற மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வவல்லவர் அந்த எழுமலையான் முன் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து சந்தியம் செய்ய தயாராக இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

கண்டனம்:

சந்திரபாபு நாயுடுவின் கருத்துகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஐடி அமைச்சர் நாரா லோகேஷ், “திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் எங்களின் மிகவும் புனிதமான கோயில். ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் YSRCP அரசாங்கத்திற்கு வெட்கப்படுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.


சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஏபிசிசி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, சந்திரபாபு நாயுடு உயர்மட்டக் குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிய சிபிஐயை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜெகன் மோகன் அரசின் கீழ் திருப்பதி லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்கு கொழுப்புகளை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு கூறியது திருமலையின் புனிதம் மற்றும் மாண்பைக் குலைப்பதாக உள்ளது. கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் தெய்வமான வெங்கடேஷ் களங்கம் அடைந்துவிட்டார்.

Also Read: இனி இரவு நேரத்தில் ஆன்லைன் கேம் விளையாட முடியாது.. அமலாகும் புதிய விதிமுறைகள் என்ன?

உங்கள் குற்றச்சாட்டுகளில் அரசியல் பரிமாணம் இல்லை என்றால்.. உணர்வுகளை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றால்… உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைக்கவும் அல்லது சிபிஐ மூலம் விசாரணை செய்யவும். பெரிய பாவமும், கொடிய தவறும் செய்த அந்த நபர் யார் என்று கண்டுபிடியுங்கள். உங்கள் கருத்துக்களுக்குக் கட்டுப்பட்டு உண்மையைக் கண்டறிய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest News