One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!
Cabinet Approval | கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு, இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவிந்த் தலைமையில் கருத்து கேட்பு குழு அமைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது அந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த சுமார் 18,626 பக்கங்களை கொண்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல்கள்
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டு முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு மாநில ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது. இதேபோல ஒட்டுமொத்த இந்தியாவும் வாக்களிக்கும் வகையில், நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டு அதன் மூலம் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தல் என பல வகையான தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அதுவும் இந்த தேர்தல்கள் பல கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போதுவரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
இதையும் படிங்க : BJP Government : 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி.. 100 நாட்களில் செய்த சாதனைகள் என்ன?
18,626 பக்கங்களை கொண்ட அறிக்கையை சமர்பித்த குழு
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜக அரசு, இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவிந்த் தலைமையில் கருத்து கேட்பு குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த குழு தற்போது சுமார் 18,626 பக்கங்களை கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ள மசோதா
இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைபடுத்த அரசியலமைப்பு பிரிவு 83, சட்டப்பேரவை தேர்தல் அரசியலமைப்பு பிரிவு 172 ஆகியவற்றைத் திருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எளிதாக நிறைவேற்றலாம் என்றும் இதற்கு மாநிலங்களின் ஒப்புதல் எதுவும் தேவை இல்லை என்றும் ராம் நாத் கோவிந்த் குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
விளக்கம் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை தொடர்பான ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி பெரும்பான்மை கிடைக்காததால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தீவிரம் காட்டவில்லை எனவும், அடுத்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும், அதற்கு முன் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.