5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உத்திரபிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்!

Election Commission of India: குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதால் அவை வாக்கு சதவீதத்தை பாதிக்கலாம் என தேர்தல் ஆணையம் கருதியுள்ளது. இதனால் தேர்தல் தேதியானது மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், பஞ்சாபில் 4 தொகுதிகளிலும்,  கேரளாவில் ஒரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது.

உத்திரபிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 04 Nov 2024 15:49 PM

உத்திரபிரதேசம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும்  தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 20 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு மாற்றப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட தேதிகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பண்டிகைகள் வருவதால் அவை வாக்கு சதவீதத்தை பாதிக்கலாம் என தேர்தல் ஆணையம் கருதியுள்ளது. இதனால் தேர்தல் தேதியானது மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 20 ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் 9 தொகுதிகளிலும், பஞ்சாபில் 4 தொகுதிகளிலும்,  கேரளாவில் ஒரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவானது நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் சில மாநிலங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கனடா இந்து கோயில் மீது தாக்குதல்.. காலிஸ்தானியர்களுக்கு வலுக்கும் கண்டனம்.. நடந்தது என்ன?

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 23ஆம் தேதி வாக்குகள் என்ன படம் நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதே போல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் 23ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Also Read: CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

அதே சமயம் நவம்பர் 13ஆம் தேதி 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கேரளாவில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும், நவம்பர் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி, உத்தரகாண்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும்  தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதியானது மாற்றப்பட்டுள்ளது. என்னதான் தேதி மாற்றப்பட்டாலும் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News