Crime News: ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த கொடூரம்.. துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை.. 8 பேர் கும்பல் அட்டூழியும்!
மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரியை தாக்கி அவர்களுடன் வந்திருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்து வந்ததாகவும், இவர்கள் பெண் நண்பர்களுடன் ஜாம் கேட் பகுதியை சுற்றிப்பார்க்க சென்றபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்: மத்திய பிரதேசத்தில் பயிற்சி ராணுவ அதிகாரியை தாக்கி அவர்களுடன் வந்திருந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையத்திற்கு இரண்டு பயிற்சி ராணுவ அதிகாரிகள் தங்கள் இரண்டு பெண் நண்பர்களுடன் சென்றிருக்கின்றனர். இவர்கள் தங்கள் முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, இவர்கள் முகாமிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென 8 பேர் கொண்ட கும்பர் துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்தனர். அவர்கள் ராணுவ அதிகாரியையும், அவர்களுடன் வந்த இரண்டு பெண்களையும் சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர். இதோடு இல்லாமல் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதாவது, ஒரு ராணுவ அதிகாரியையும், ஒரு பெண்ணையும் பிடித்து வைத்துக் கொண்டு, மற்றொரு பெண்ணையும், ராணுவ அதிகாரியையும் ரூ.10 லட்சம் எடுத்து வர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால், அந்த ராணுவ அதிகாரியும், அந்த பெண்ணும் ராணுவ முகாமிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறியிருக்கின்றனர். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இதற்கிமையில், நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால் அவர்கள் ராணுவ அதிகாரி மற்றும் அவருடன் இருந்த கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் ராணுவ அதிகாரி மயக்க நிலைக்கு சென்றார்.
Also Read: நடப்பாண்டின் 2வது சந்திர கிரகணம்.. எங்கு, எப்படி பார்க்கலாம்?
கூட்டு பாலியல் வன்கொடுமை:
அவருடன் இருந்த பெண்ணை 8 பேர் கொண்ட கும்பல் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து, போலீசாரின் வாகனங்களை பார்த்த கும்பல் உடனே அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை இரண்டு பேர் கைதாகி உள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், 2 ராணுவ அதிகாரியும், 2 பெண்களுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் இந்தூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படித்து வந்ததாகவும், இவர்கள் பெண் நண்பர்களுடன் ஜாம் கேட் பகுதியை சுற்றிப்பார்க்க சென்றபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் வன்கொடுமைகள்:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் நின்ற பாடில்லை. அண்மையில் கூட நாட்டையே ஒரு சம்பவம் உலுக்கியது.
அதவாது, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது, இரவு பணியில் இருந்தபோது மருத்துவமனைக்கு வந்த நபர், பெண் மருத்துவரை கொலை செய்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Also Read: வாழை பட பாணியில் விபத்து.. மூட்டை அடியில் உயிரை விட்ட 7 தொழிலாளர்கள்!
மருத்துவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தலைமை நீதிபதியும் வருத்தம் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பா சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சஞ்சய ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை என பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராணுவ அதிகாரிகள் 2 பேரை தாக்கி, அவரது பெண் நண்பர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.