5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது மாணவர்கள்.. உடலை நதியில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!

Harassment | 3 ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியை அதே பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த மாணவர்களில் இரண்டு பேர் 12 வயது சிறுவர்கள் என்றும் ஒருவர் 13 வயது சிறுவன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது மாணவர்கள்.. உடலை நதியில் வீசிய கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Jul 2024 19:09 PM

சிறுமி பாலியல் வன்கொடுமை : ஆந்திராவில் 8 வயது சிறுமி, 3 மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பகிடலயாவில் 3 ஆம் வகுப்பு படித்து வந்த 8 வயது சிறுமியை அதே பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த மாணவர்களில் இரண்டு பேர் 12 வயது சிறுவர்கள் என்றும் ஒருவன் 13 வயது சிறுவன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவியை கடந்த ஜூலை 7 ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் தேடிவந்த நிலையில், அந்த 3 மாணவர்கள் சிறுமியை விளையாட்டு மைதானத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து உடலை நதியில் வீசிய மாணவர்கள்

பள்ளி மைதானத்தில் இருந்து சிறுமியை கடத்தி சென்ற மாணவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள பம்பு செட்டிற்கு சிறுமி அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு நடந்ததை சிறுமி வெளியே சொல்லி விடுவாரோ என்ற அச்சத்தில், அவர்கள் மூவரும் சிறுமியை கொலை செய்து உடலை அருகில் இருந்த கிருஷ்ணா நதியில் வீசிச் சென்றுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோப்ப நாய் உதவியுடன் வெளிவந்த உண்மை

சிறுமியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசாராலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதன் காரணமாக மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சிறுமியை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். அப்போது மோப்ப நாய் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களில் அதே பகுதியில் வசிக்கும் 1 சிறுவனின் வீட்டிற்கு போலீசாரை அழைத்துச் சென்றுள்ளது.

சிறுவர்களை கைது செய்த போலீஸ்

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். போலீசாரை கண்டு பயந்துப்போன அந்த சிறுவன், நடந்த உண்மைகளை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மாணவர் அளித்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 சிறுவர்களையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : AIDS : எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 828 மாணவர்கள்.. 47 பேர் உயிரிழந்த சோகம்.. திரிபுராவில் என்ன நடக்கிறது?

நதியில் இருந்து உடல் மீட்பு

சிறுவனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் உடல் கிருஷ்ணா நதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.