Uttarpradesh Crime News: ”பள்ளிக்கு புகழ் கிடைக்கணும்” 2ம் வகுப்பு மாணவன் நரபலி.. ஆசிரியர்கள் செய்த கொடூரம்!
Hathras Murder: உத்தர பிரதேச மாநிலத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியர்கள் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் பள்ளியில் ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். பள்ளிக்கு பெயரும் புகழும் கிடைப்பதற்காக குழந்தையை நரபலி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியர்கள் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் பள்ளியில் ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். பள்ளிக்கு பெயரும் புகழும் கிடைப்பதற்காக குழந்தையை நரபலி கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு குழந்தையை அவர்கள் கொலை செய்ய முயன்றபோது அது நிகழாமல் போனதும் விசாரணையில் அம்பலமானது. நாட்டில் பல இடங்களில் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் நரபலி கொடுக்கும் சம்பங்கள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு கூட கேரளாவில் இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுபோன்ற நரபலி கொடுக்கும் சம்பவங்கள் கேரள மட்டுமின்றி உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் சிறுவர்கள் உட்பட அனைவரையும் மூட நம்பிக்கை என்ற பெயரில் நரபலி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளிக்கு பெரும், புகழும் கிடைப்பதற்காக 2ஆம் வகுப்பு மாணவரை ஆசிரியர்களே நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO | A class 2 student at a private school died under mysterious circumstances in Hathras. The body of the student was recovered from school director Dinesh Baghel’s car, the police said. The family of the child has alleged that he was killed as part of ‘black magic’ rituals.… pic.twitter.com/MqbnbgIoiw
— Press Trust of India (@PTI_News) September 27, 2024
என்ன நடந்தது?
உத்தர பிரசேத மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பெரியளவில் பெயரும், புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் சொன்னதை நம்பி, அப்பள்ளி ஆசிரியர்கள் 2ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்துள்ளனர். கொலை செய்யப்பட்டது 11 வயதான கிருதார்த் என்று அடையாளம் காணப்பட்டள்ளது. கடந்த வாரம் சிறுவன் பள்ளி விடுதியில் கொலை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போலீசார் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் பள்ளிக்கு வெளியே உள்ள குழாய் கிணறு அருகே சிறுவனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் சிறுவனை விடுதியில் இருந்து வெளியே அழைத்து சென்றபோது அவன் கத்தி கூச்சலிட்டான். இதனால் சிறுவனை ஆசிரியர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
மேலும், விசாரணையில் பள்ளிக்கு அருகே மாந்திரீகம் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு செப்டம்பர் 6 ஆம் தேதி சிறுவனை நரபலி கொடுக்க முயன்றதும் ஆனால் அவர் முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
சிக்கிய 5 பேர்:
சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் காரில் மருத்துவமனைக்கு அழைத் செல்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டவர் குழந்தையின் பெற்றோரிடம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்தனர். 11 வயது சிறுவனை நரபலி கொடுத்த சம்பவத்தில் தனியார் பள்ளி இயக்குநர், அவரது தந்தை, 3 ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
Also Read: ட்ரீட் தர மாட்டியா? 16 வயது சிறுவனை குத்திக் கொன்ற நண்பர்கள்.. நடுரோட்டில் பயங்கரம்!
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தந்தை கிரிஷன் குஷ்வாஹா அளித்த புகாரின்படி, தனது மகன் உடல்நிலை சரியில்லாததாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அவருக்கு திங்கள்கிழமை அழைப்பு வந்ததாகவும், இதனால் தந்தை குவ்வாஷா பள்ளிக்கு சென்றுபார்த்தபோது காரில் குழந்தையை அழைத்து சென்றனர். காரை அவர்கள் நிறுத்தமாமல் சென்றதாவும், பின் தொடர்ந்து துரத்தி பிடித்தபோது குழந்தை சடலாக காரில் கண்டெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.