போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. 11 பேர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு.. அதிர்ச்சி காரணம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறை பணிக்காக உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 நாட்களில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1.27 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 78,023 மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
போலீஸ் உடற்தகுதித் தேர்வு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறை பணிக்காக உடற்தகுதித் தேர்வில் கலந்து கொண்டவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 நாட்களில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது ஆளுங்கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. ஜார்க்கண்ட மாநிலத்தில் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் நடத்ததப்பட்டு வந்தது. ராஞ்சி, கிரிதிஹ், ஹசாரிபாக், பலமு, கிழக்கு சிங்பூம் மற்றும் சாஹேப்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள ஏழு மையங்களில் உடற்தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1.27 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 78,023 மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
Also Read: புருனேவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர்.. 3 நாள் பயணத்தின் முக்கியத்துவம் என்ன?
இவர்களுக்கு ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் உடற்தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வின்போது ஒவ்வொரு மையத்திலும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலமுவ் மையத்தில் 4 பேரும், கிரிதிஹ், ஹசாரிபாக் மையத்தில் தலா இரண்டு பேரும், ஜாகுவார், கிழக்கு சிங்கபூமி, மொசபானி, சாஹேப்கஞ்ச் மையங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
11 நாட்களில் 11 பேர் உயிரிழப்பு:
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழப்புக்கு ரியான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மையங்களிலும் மருத்துவ குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகலில் தேர்வு நடத்துவதற்கு பதிலாக அதிகாலை 4:30 மணிக்கு போட்டியை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read: சுற்றி வளைத்த 15 பேர்.. முன்னாள் கவுன்சிலரை சுட்டுக் கொன்ற கும்பல்… திக்திக் வீடியோ!
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வேலை இல்லாத இளைஞர்களுக்கு நடந்த கொடூர சம்பவம் இது என்றும் ஆட்சேர்ப்பு மையங்களில் போதிய சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் எதிக்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது. இது ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது. போலீஸ் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.