5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கார்த்திகை தீபம்’ சீரியலில் காதலுடன் தீபா கேட்ட கேள்வி!

Karthigai Deepam serial update: காதலுடன் தீபா கேட்ட கேள்வி, ஒரே வார்த்தையில் பல்பு கொடுத்த கார்த்திக் என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

’கார்த்திகை தீபம்’ சீரியலில் காதலுடன் தீபா கேட்ட கேள்வி!
’கார்த்திகை தீபம்’
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Aug 2024 20:14 PM

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கோவிலுக்கு வருபவர்களின் காலை கழுவி பரிகாரம் செய்து கொண்டிருக்க தீபாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்து ஓடி வந்து அபிராமியிடம் எதுக்கு அத்தை இப்படியெல்லாம் செய்யறீங்க என்று வருத்தப்படுகிறாள். எனக்கு கல்யாணம் ஆகும் போது என் அம்மா இப்படி பண்ணாங்க, இப்போ என் அம்மாவை போலவே நீங்களும் எனக்காக இப்படி பண்றீங்க என்று வருத்தப்படுகிறாள். இதை தொடர்ந்து ரம்யாவின் அப்பா கார்த்திக்கை வர வைத்து ரம்யா அவன் மீது காதலுடன் இருக்கும் விஷயத்தையும் டைரியில் இது குறித்து எழுதி வைத்திருந்த விஷயத்தையும் சொல்கிறான். இதனால் கடுப்பாகும் கார்த்திக் ரம்யா வீட்டிற்கு வந்து அவளை அறைகிறான். ரம்யா ஆமா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதுக்கு தான் இப்படி பண்ணேன், இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்க ரம்யாவின் அப்பாவும் போலீசும் உள்ளே வருகின்றனர், போலீஸ் ரம்யாவை கைது செய்ய போவதாக சொல்ல ரம்யா போலிஸ் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டு கொள்கிறாள்.

இதனால் ரம்யாவின் அப்பா அதிர்ச்சி அடைய இறுதியில் இது அவருடைய கனவு என தெரிய வருகிறது. இதனால் கார்த்திக்கிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் கார்த்திக் அவர் சொன்னதால் வீட்டிற்கு வந்து விட உங்களுக்கு மாற்றி போன் செய்து விட்டதாக சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு கார்த்திக், தீபா கோவிலுக்கு வர கார்த்திக் காரை பார்க் செய்து விட்டு வர போன கேப்பில் தலையில் இருந்த பூவை எடுத்து விட்டு கார்த்திக் வந்ததும் பூ வாங்கி வைத்து விட சொல்கிறாள். கார்த்திக் உங்க தலையில் ஏற்கனேவே பூ இருந்ததே என்று கேட்க தீபா இல்லை என்று சொல்கிறாள். பூ கடைக்காரர் அந்த பொண்ணு உங்க கையால் பூ வச்சுக்கணும்னு ஆசைப்படுத்து வாங்கு வச்சி விடுங்க என்று சொல்ல கார்த்திக் தீபாவுக்கு பூ வைத்து விடுகிறான்.

இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க தீபாவுக்கு மருதாணி போடும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கின்றனர். அபிராமி கொஞ்சம் வித்தியாசமா செய்யலாம் கார்த்தியே தீபாவுக்கு மருதாணி போட்டு விடட்டும் என்று சொல்கிறாள். இதற்கு எல்லோரும் ஓகே சொல்கின்றனர்.

அதன் பிறகு கார்த்திக் தீபாவுக்கு மருதாணி போட தயாராக அருண் ஆபீஸ்ல எல்லாரையும் நீ வேலை வாங்கிட்டு இருந்த இப்போ உன் பொண்டாட்டிக்கு மருதாணி போடுற மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை என்று கலாய்த்து சிரிக்க கார்த்திக் நான் தீபாவுக்கு மருதாணி போடுற மாதிரி நீங்க எல்லாரும் உங்க பொண்டாட்டிக்கு மருதாணி போடுங்க என்று மாட்டி விடுகிறான்.

இதையடுத்து அருண் ஐஸ்வர்யாவுக்கும் ஆனந்த் மீனாட்சிக்கும் அருணாச்சலம் அபிராமிக்கும் தர்மலிங்கம் ஜானகிக்கும் என ஒவ்வொருத்தரும் அவர்களது மனைவிக்கு மருதாணி போட்டு விடுகின்றனர்.

Also read… ”நெஜமாதான் சொல்றியா”… பிரபல நடிகையா இந்த சிறுமி!

தீபா கார்த்தியிடம் எப்படியும் எனக்கு கை நல்லா செவக்கும்னு தெரியும் அப்போ நீங்க காதலை ஒத்துக்குவீங்களா என்று கேட்க ஒரு பார்வை பார்த்த கார்த்திக் பார்க்கலாம் என்று சாதாரணமாக பதில் சொல்கிறான். அதன் பிறகு மருதாணி போட்டு கொஞ்சம் நேரம் விட்டு கைகளை கழுவ தீபாவின் கை மட்டும் நன்றாக சிவந்து இருக்கிறது. பிறகு கார்த்திக்கிடம் வந்து இது குறித்து கேட்க அவன் போயிட்டு அண்ணி கிட்ட கேளுங்க என்று சொல்கிறான்.

பிறகு தீபா மீனாட்சியிடம் கேட்க அவள் உனக்கு போட்டது மட்டும் தான் ரியல் மருதாணி மத்தவங்களுக்கெல்லாம் வச்சது மருதாணி கிடையாது நான்தான் மாத்தி வச்சேன் என்று சொல்கிறாள். அடுத்து வீட்டுக்கு தரகரை வரவைத்து மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். இதைக் கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Latest News