5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

’கார்த்திகை தீபம்’ சீரியலில் பொண்ணு பார்க்க வந்த அபிராமி குடும்பம்.. தீபா கேட்ட கேள்வி!

Karthigai Deepam serial update: பொண்ணு பார்க்க வந்த அபிராமி குடும்பம்,தீபா கேட்ட கேள்வி, ட்விஸ்ட் வைத்த கார்த்திக் என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்

’கார்த்திகை தீபம்’ சீரியலில் பொண்ணு பார்க்க வந்த அபிராமி குடும்பம்.. தீபா கேட்ட கேள்வி!
கார்த்திகை தீபம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2024 17:51 PM

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா ஒரு பெண் சாமியார் தான் என்னை காட்டு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகு தான் எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்க தான் என்று சொல்கிறாள். அடுத்து அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து அந்த சாமியாரை சந்தித்து கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுக்க சொல்ல முதலில் யோசித்த அவர் பிறகு ஒரு தேதியை குறித்து கொடுக்கிறார். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் தர்மலிங்கத்திடம் உங்க ஜோசியர் அப்படி சொன்னாரு, எங்க ஜோசியர் கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுத்து இருக்காரு என்று அபிராமி சொல்கிறாள். அதன் பிறகு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் வெங்கையா வீட்டிற்கு வந்து நான் தான் ரம்யா நம்பீசன் எனக்கு இன்னும் ரெண்டு நாள் உங்க நிலம் வேண்டும், சாமியார் வருவதாக சொல்ல இவன் நீங்க யார்? நீங்க ரம்யா நம்பீசன் இல்லையே என்று சொல்ல கார்த்திக் என்ட்ரி கொடுத்து நடந்ததை சொல்ல சொல்லி கேட்கின்றான் .

இதை தொடர்ந்து வெங்கையா ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறார். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வருகிறது. ரம்யா போனை எடுத்ததும் கார்த்திக் நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும் போனை கட் செய்து சிம்மை கழட்டி உடைத்து எறிகிறாள். அடுத்து ரம்யா நொண்டியபடி கார்த்திக் வீட்டிற்கு வர மைதிலியும் மீனாட்சியும் சேர்ந்து தீபாவுக்கு கல்யாணம் செய்ய நாள் குறித்த விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர்.

அடுத்து ரியாவை பெயிலில் ஒருவர் வெளியே எடுத்ததாக சொல்லி லாயர் ஒருவர் வெளியே அழைத்து வர அங்கு ரம்யா நிற்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைவோம் என்று சொல்லி இருவரும் கூட்டு சேருகின்றனர். அடுத்து கார்த்திக் ரூமுக்கு வர தீபா மத்த ரெண்டு பேரை போல் நான் இந்த வீட்டிற்கு முறைப்படி மருமகளா வரல, நமக்கே தெரியாமல் தான் நம்ம கல்யாணம் நடந்தது. உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்க கார்த்திக் அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொல்கிறான். கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் தீபா.

இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபாவை பெண் பார்க்க கார்த்திக் குடும்பத்தினர் அவளது வீட்டிற்கு வருகின்றனர். தீபா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அபிராமி பொண்ணு லட்சணமா இருக்கா என்று சொல்கிறாள். அதன் பிறகு பொண்ணு நல்லா பாடுவானு சொன்னாங்க என்று மீனாட்சி கேட்க மைதிலி ஆமா கர்நாடிக் மியூசிக் நல்லா பாடுவா நிறைய கச்சேரில பாடி பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா என்று சொல்ல ஒரு பாட்டு பாட சொல்லுங்க என்று சொன்னதும் தீபா பாட்டு பாடுகிறாள்.

Also read… Cinema Rewind: ரட்சகன் படத்திற்கு பிறகு ஏன் தமிழில் நாயகனாக நடிக்கவில்லை? நாகர்ஜூனா சொன்ன பதில்!

அதன் பிறகு பொண்ணை எங்களுக்கு பிடிச்சிருக்கு என்று அபிராமி குடும்பத்தினர் சொல்ல தீபா ரம்யாவை இடிக்க ரம்யா பொண்ணுக்கு மாப்பிள்ளை கிட்ட தனியா பேசணுமாம் என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து கார்த்திக், தீபா தனியாக பேச போக கார்த்திக் நான் எம்பிஏ படிச்சிருக்கேன் என்று சொன்னதும் தீபா நான் 12வது பெயில் என்று சொல்ல கார்த்திக் சிரிக்கிறான். அதன் பிறகு எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று தீபா கேட்க என் அம்மா கிட்ட சொல்றேன் என்று கீழே இறங்கி வருகிறான்.

அதன் பிறகு அபிராமியிடம் உங்களுக்கு பெண்ணை பிடிச்சிருக்கா என்று கேட்க அவள் எனக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னதும் கார்த்திக் எனக்கும் பிடிச்சிருக்கு என்று சொல்கிறான். பிறகு தட்டு மாற்றி நிச்சயம் முடித்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Latest News