5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கார்த்திகை தீபம் சீரியலில் வசமாக சிக்கிய ரம்யா!

Karthigai Deepam serial update: அம்பிகாவால் அம்பலமான உண்மை, வசமாக சிக்கிய ரம்யா என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.

கார்த்திகை தீபம் சீரியலில் வசமாக சிக்கிய ரம்யா!
கார்த்திகை தீபம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2024 22:27 PM

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியின் உறவினர் ஒருவர் கல்யாணத்திற்கு வந்திருக்க அவர் அவசர வேலையாக செல்ல வேண்டி இருப்பதாக சொல்லி தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி மைதிலி மற்றும் மீனாட்சியை கூப்பிட்டு தீபாவை அழைத்து வர சொல்கிறாள். இருவரும் தீபாவை கூப்பிட அவள் சும்மா சும்மா வர முடியாது என்று சத்தம் போட்டு துரத்தி விடுகிறாள், அவர்கள் அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அபிராமி உறவினரை சமாளித்து அனுப்பி வைக்கின்றனர். இதை தொடர்ந்து அம்பிகா உள்ளே நுழைய அபிராமி ரொம்ப நேரமா ஆள் இல் எங்க போய் இருந்த என்று கேள்வி கேட்கிறாள். உன் பையனுக்கும் தீபாவுக்கும் கல்யாணம், எதுவும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அதான் கிப்ட் வாங்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். தீபாவுக்கு வாங்கிய ஜெயினை எடுத்து காட்டி இதை என் கையால் போட்டு விடணும் என்று சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள். முடிந்த அளவுக்கு அம்பிகாவை நெருங்க விடாமல் முயற்சி செய்கிறாள்.

இதனால் அம்பிகாவுக்கும் தீபா இப்படி பண்றவள் இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது, இந்த சமயத்தில் இன்னொரு வயதான உறவினர் தீபாவை பார்க்க வேண்டும் என்று சொல்ல அபிராமி கூப்பிட வேறு வழியின்றி ரியா அந்த கிஃப்ட்டை வாங்கி கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறாள். அப்போது ரியா முகமூடியை கழட்டி ரம்யாவிடம் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த அபிராமி இது மொத்தத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். தீபா ரூபத்தில் இருப்பது ரியா தான் என்பதை அறிந்து கொள்கிறாள்.

அதாவது, கார்த்திக் எங்கே போனான் என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்க அருண், ஆனந்த் போன் செய்ய கார்த்திக் போனை எடுக்காமல் இருக்கிறான். இன்னொரு பக்கம் தீபா ஆட்டோவில் மண்டபத்தை நோக்கி வேகவேகமாக வந்து கொண்டிருக்கிறாள்.

Also read… சண்டகோழி முதல் மார்க் ஆண்டனி வரை… விஷால் நடிப்பில் பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!

மணமேடையில் இதுவரை ரியா தீபா கெட்டப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் தற்போது ரம்யா தீபாவின் முகத்திரையை அணிந்து கொண்டு அமர்ந்து இருக்கிறாள். இந்த சமயத்தில் தீபா கல்யாண மண்டபத்திற்கு வந்து விட அனைவரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைகின்றனர். தீபா நான் தான் உண்மையான தீபா என்று சொல்ல ரம்யா இல்ல நான் தான் உண்மையான தீபா என்று சொல்கிறாள். தர்மலிங்கம், ஜானகி உட்பட எல்லாரும் உண்மையான தீபா யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் மயக்கத்தில் இருந்த அம்பிகா எழுந்து வெளியே வர ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். வெளியே இருப்பவள் தான் உண்மையான தீபா. மணமேடையில் இருப்பது ரியா என்று முகத்திரையை கிழிக்க அது ரம்யா என தெரிய வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Latest News