‘கார்த்திகை தீபம்’ சீரியலில் ரியாவுடன் கூட்டு சேர்ந்த ரம்யா!
Karthigai Deepam serial update: கார்த்திக்கு தீபா விட்ட சவால், ரியாவுடன் கூட்டு சேர்ந்த ரம்யா என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலின் வீகெண்ட்ட் எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த பேக் எப்படி வந்தது என்று விசாரிக்கும் போது அருண் காரில் இருந்தது நான் தான் கொண்டு வந்தேன் என்று சொல்ல கார்த்திக் இளையராஜா சட்டையை பிடித்து என்னடா இது என்று கேட்க அவன் இது என்னுடைய பேக் இல்ல அந்த சேகர் பேக்காக இருக்கும் என்று சொல்கிறான். உடனே இரண்டு பேரும் சேகர் வீட்டிற்கு வருகின்றனர், வீடு பூட்டி இருக்க இளையராஜா அப்போ அந்த சேகர் தான் போலி சாமியாராக இருப்பான் என்று சொல்லி திரும்ப சேகர் அங்கு நிற்கிறான். இது உன்னுடைய பேக் தானே என்று விசாரிக்க அவன் என்னுடையது இல்ல என்று சொல்லி வீட்டு கதவை திறந்து என் பேக் இங்க இருக்கு என்று சொல்லி கன்பியூஸ் செய்கிறான். அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் செய்து நாடக காரர் ஒருவருடைய பேக் என்று சொல்ல கார்த்திக்கு குழப்பம் அதிகமாகிறது. இருந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் கார்த்திக் அமைதியாகி விடுகிறான். அடுத்து ரம்யா கான்ஸ்டபிள் மற்றும் அவருடன் சேர்ந்து நடித்தவனுக்கு பணத்தை கொடுத்து அங்கிருந்து கிளம்பி தீபா வீட்டிற்கு வருகிறாள். அடிக்கடி ரம்யா வீட்டிற்கு வருவது தப்பாக இருப்பதாக யோசிக்கும் மைதிலி மற்றும் மீனாட்சி படிக்கட்டில் சோப் தண்ணியை ஊற்றி ரம்யாவை விழ வைக்க அவளுக்கு காலில் அடிபடுகிறது.
இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபா ஒரு பெண் சாமியார் தான் என்னை காட்டு அம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க, அவங்க என் கையில் ஒரு கயிறை கட்டி விட்ட பிறகு தான் எனக்குள்ள ஒரு சக்தி வந்தது, என்னை காப்பாத்துனது கூட அவங்க தான் என்று சொல்கிறாள். அடுத்து அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து அந்த சாமியாரை சந்தித்து கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுக்க சொல்ல முதலில் யோசித்த அவர் பிறகு ஒரு தேதியை குறித்து கொடுக்கிறார். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்ததும் தர்மலிங்கத்திடம் உங்க ஜோசியர் அப்படி சொன்னாரு, எங்க ஜோசியர் கல்யாணத்திற்கு நாள் குறித்து கொடுத்து இருக்காரு என்று அபிராமி சொல்கிறாள்.
அதன் பிறகு ஆங்கிலோ இந்தியன் பெண்மணி ஒருவர் வெங்கையா வீட்டிற்கு வந்து நான் தான் ரம்யா நம்பீசன் எனக்கு இன்னும் ரெண்டு நாள் உங்க நிலம் வேண்டும், சாமியார் வருவதாக சொல்ல இவன் நீங்க யார்? நீங்க ரம்யா நம்பீசன் இல்லையே என்று சொல்ல கார்த்திக் என்ட்ரி கொடுத்து நடந்ததை சொல்ல சொல்லி கேட்கின்றான். இதை தொடர்ந்து வெங்கையா ஒருத்தவங்க போன் மூலமாக நிலத்தை கேட்டாங்க, பணத்தையும் கொடுத்தாங்க அதனால் தான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறார். கார்த்திக் அந்த நம்பருக்கு போன் போட சொல்ல அது ரம்யாவின் இன்னொரு நம்பர் என்று தெரிய வருகிறது.
Also read… Actor Dhanush: அடங்காத அசுரன் தனுஷிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
ரம்யா போனை எடுத்ததும் கார்த்திக் நான் கார்த்திக் பேசுறேன் என்று சொன்னதும் போனை கட் செய்து சிம்மை கழட்டி உடைத்து எறிகிறாள். அடுத்து ரம்யா நொண்டியபடி கார்த்திக் வீட்டிற்கு வர மைதிலியும் மீனாட்சியும் சேர்ந்து தீபாவுக்கு கல்யாணம் செய்ய நாள் குறித்த விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். அடுத்து ரியாவை பெயிலில் ஒருவர் வெளியே எடுத்ததாக சொல்லி லாயர் ஒருவர் வெளியே அழைத்து வர அங்கு ரம்யா நிற்கிறாள். எதிரிக்கு எதிரி நண்பன். உனக்கு ஆனந்த்தோட பொண்டாட்டி ஆகணும், எனக்கு கார்த்திக்கோட பொண்டாட்டி ஆகணும். ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைவோம் என்று சொல்லி இருவரும் கூட்டு சேருகின்றனர்.
அடுத்து கார்த்திக் ரூமுக்கு வர தீபா மத்த ரெண்டு பேரை போல் நான் இந்த வீட்டிற்கு முறைப்படி மருமகளா வரல, நமக்கே தெரியாமல் தான் நம்ம கல்யாணம் நடந்தது. உங்களுக்கு என் மேலே காதல் இருக்கா? இல்ல அம்மா சொல்லியதால் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா என்று கேட்க கார்த்திக் அம்மா சொல்லி தான் ஓகே சொன்னேன் என்று சொல்கிறான். கல்யாணத்துக்குள்ள என் மேலே உங்களுக்கு காதல் வர வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் தீபா. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.